Tuesday, December 29, 2009

அமெரிக்காவை நோக்கி தற்கொலைப் படையினர் வருகிறார்கள்-பிடிபட்ட நைஜீரியர் பரபரப்பு

என்னைப்போல மேலும் பலர் தீவிரவாதத் திட்டத்துடன் அமெரிக்காவை நோக்கி பல முனைகளிலிருந்து வந்து கொண்டுள்ளனர் என்று அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்று பிடிபட்ட நைஜீரிய இளைஞர் உமர் பாருக் அப்துல்முத்தல்லாப் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

எப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பல படங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. உளவு அமைப்புகள் தங்களது கணண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அப்துல்முத்தல்லாப் கூறுகையில், என்னைப் போல பலர் அமெரிக்காவை நோக்கி வருகின்றனர். குறிப்பாக ஏமனிலிருந்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அமெரிக்காவைத் தாக்கலாம் என்று கூறியுள்ளார் முத்தல்லாப்.

முத்தல்லாப் பிடிபடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா தலைவர்கள் ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டனர். அதில், கடவுளின் எதிரிகளைத் தாக்க வெடிகுண்டுகள் போய்க் கொண்டுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

23 வயதான முத்தல்லாப் தற்போது கூறுவதைப் பார்க்கும்போது அல் கொய்தாவின் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் அமெரிக்காவைக் குறி வைத்திருப்பதாக தெரிகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com