ஜனாதிபதியை வெற்றீட்டச் செய்வதன் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
மூதூர், மல்லிகைத்தீவு, பெரியவெளி, பட்டித்திடல் பகுதி மக்களிடம் அமைச்சர் முரளிதரன் தெரிவிப்பு.
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மூதூர், மல்லிகைத்தீவு, பெரியவெளி, பட்டித்திடல் பகுதிக்கு அமைச்சர் முரளிதரன் விஜயம் செய்து இப் பகுதியில் யுத்தத்தால் சேதமுற்ற கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது கட்டிடங்களையும் பார்வையுற்றதுடன் அண்மையில் குடியேற்றப்பட்ட பகுதியில் உள்ள மக்களுடனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடிய அமைச்சர் முரளிதரன் இம்மக்களின் விவசாய, குடியிருப்பு காணிகளுக்கு உறுதிபத்திரம் பெறமுடியாமை, மின்சார வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமை, யுத்தத்தால் சேதமுற்ற பாடசாலை கோயில்கள் புனர்நிர்மானம் செய்யப்படாமை, காணாமல் போன இளைஞர் யுவதிகளின் விபரம் பெறமுடியாமை போன்ற முக்கிய பிரச்சனைகளை பற்றி ஆராய்ந்தார்.
மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் முரளிதரன் தான் இவ்வருடம் ஒவ்வொரு மாதமும் இப்பகுதிகளுக்கு வருகைதந்து அனைத்து மக்களையும் சந்தித்திருக்கிறேன், உங்கள் பிரச்சனைகளை எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் கவனத்துக்கும் கொண்டு வந்திருக்கின்றேன். இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அவ் அமைச்சர்களையும் உங்கள் பகுதிகளுக்கு அழைத்து வந்து உங்கள் முன்னிலையில் நிறுத்தி உங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். எமது கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன் என அவர் கூறினார்.
அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எமது வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச்செய்வதன் ஊடாக கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து மிக உயர்ந்த நிலைக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை கொண்டு வரமுடியுமென அமைச்சர் முரளிதரன் மக்களிடம் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மூதூர் பிரதேச தவிசாளர் திரு. தௌபீக், மூதூர் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் தமிழ்செல்வன், ஈச்சிலம்பற்று வெருகல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அரவிந்தன் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர்கள் அஸ்லாம், நஸ்றுல்லா மற்றும் பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment