ஜீ.எல் பீரிசின் கருத்து அரசினுடையது அல்ல. அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தபோது, ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிப்பிட்ட முடிவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ஜீ.எல் பீரிசின் குறிப்பிட்ட கருத்தானது அவரது சொந்த கருத்தாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கம் அவ்வாறான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும், வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் பேச்சுக்களை நாடாத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment