பனாகொட முகாமில் இராணுவத்தினர் முடக்கி வைக்கப்பட்டனர்.
ஹோமாகம பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரச்சாரக்கூட்டம் ஆரம்பமாகும் பி.ப 4.00 நேரத்திலிருந்து பானாகொட முகாமிலிருந்து எவரும் வெளியேக்கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்தாக இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றபோது, அங்கு தவறுகள் எதாவது இழைக்கின்ற இராணுவத்தினரை கைது செய்வதற்காக ஏகப்பட்ட இராணுவப் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தாகவும் , இவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு குறிப்பிட்ட தொகை இராணுவத்தினர் பிரச்சார மேடையை அமைப்பதற்கும் , களற்றுவற்கும் உதவி புரிந்ததாகவும், இராணுவத்தில் பெரும்பாண்மையான எண்ணிக்கையினர் ஜெனரல் பொன்சேகா பக்கமே உள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment