பௌத்த பிக்கு கைது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரான சங்கைக்குரிய தம்மர அமில தேரர் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேரர் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், ஹொரண மற்றம் குளியாப்பிட்டி பிரதேசங்களில் குறிப்பிட்ட தேரர் ஆட்களிடம் வெளிநாடு அனுப்புவதாக பணம்பெற்றுள்ளதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment