ரிசானாவின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகின்றது. மொழிபெயர்பாளரை மாற்ற உத்தரவு.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா நௌபீக் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அந்த நாட்டின் நீதியரசர் அப்துல்லா அல் ரசீம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரிசானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரை நீக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்றில் ரிசானா நௌபீக் மற்றும் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்த இரு பொலிஸாரும் ஆஜராகியிருந்தனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நீதிமன்றில் ஆஜராகிவந்த இறந்தகுழந்தையின் தந்தை இம்முறை மன்றில் ஆஜராகி இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ரிசானா வீட்டு எஜமானின் குழந்தை மரணமடைந்தது தொடர்பாக அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
சவூதி அரேபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இதனையடுத்து 2009ம் ஆண்டு ரிசானா நௌபீக் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ததை அடுத்து விசாரணைகள் அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment