Tuesday, December 29, 2009

ஜேவிபி யின் தலவைர் நேஸனுக்கு வழங்கியுள்ள நேர்காணல்.


ஜே.வி.தலைவர் சோமவன்ச அமரசிங்கா த.நேசன் பத்திரிகையின் செய்தியாளர் ஜோகான் அபையவர்டனவிற்கு வழங்கிய செவ்வி.

நேசன் பத்திரிகையின் கேள்வி : கடந்த காலங்களில் உங்களின் சடலங்களின்மேற்தான் யுத்த வீரர்களுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைகள் நடக்க விடப்போவதாகக் சூழுரைத்தீர்கள். இப்பொழுது அந்த நிலைப்பாட்டை மாற்றி விட்டீர்களா?

சோமவன்ச அமரசிங்காவின் பதில் : இல்லை. அந்த நிலைப்பாட்டை ஏன் மாற்ற வேண்டும்.

கேள்வி - 'சர்வதேச மனித உரிமைகளுக்கான ஆலோசனை அமைப்பிலிருந்து அரசாங்கத்திற்கு மனிதஉரிமை மீறல் சம்பந்தமாகப் புதிய கடிதம் வந்ததோடு உங்களின் சர்வதேச உறுவுகளின் தலைவர் விஜிதா ஹேரத் புதியதொரு சர்வதேச சதி ஆரம்பித்துள்ளது' என்று கூறியிருக்கிறார். 'கடந்துபோன அண்மைக்காலங்களில் இப்படியான வேட்டைகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. இப்படியான வேட்டைகளிலிருந்து சீனா, இந்தியா, ரஸ்சியா மற்றும் மூன்றாமுலக நாடுகள் தலையிட்டு எங்களைக் காப்பாற்றியதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.' அரசாங்கம் இப்படியான அமைப்புகளினூடாக இதை எதிர்கொள்வதற்கு ஏதுவான கடிதம் எதையும் இப்பொழுது பெறமுடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில் - எங்களைக் காப்பாற்றிய நாடுகளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் எமது நாடும் அப்பொழுது தனது கடமையைச் சரிவரச் செய்தது.

கேள்வி - அரசாங்கம் அப்படியான ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளதாக விஜிதா ஹேரத் கூறியிருக்கிறார். இந்தச் செய்தி இன்றய பத்திரிகைகளில் வந்துள்ளது.

பதில் - இன்றய பத்திரிகைகளை நான் என்னும் பார்வையிடவில்லை. இப்பொழு 10 மணி தான். இவ்வளவும் நான் வேறு கடமைகளுள் மூள்கியிருந்தேன். நான் அந்தச் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். தோழர் விஜிதா ஹேரத் அப்படி ஒரு கூற்றை வெளிட்டிருந்தால் அவர் ஆதாரத்தோடுதான் வெளியிட்டிருப்பார் என்று நான் கூறுவேன்.

கேள்வி - அரசாங்கம் மனித உரிமை ஆலோசனைச் சபை, தான் நினைத்தபடி எதையும் செய்யட்டும், என்று விட்டுவிட்டால் அது ஒரு பெரிய சாதனையாகும்.

பதில் - இந்தக் கேள்வி என்ன பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது.

கேள்வி - மனித உரிமை ஆலோசனை அமைப்பு ஜெனரல் பொன்சேகாவின் கூற்றுப்பற்றியே எடுத்தியம்பியுள்ளது.

பதில் - என்ன கூற்றது? அது பற்றி எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கேள்வி - பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா ராஜபக்ஸ்ச 58 வது படைப்பரிவின் தளபதிக்கு வெள்ளைக் கொடியோடு வரும் புலித்தலைவர்களைச் சுட்டுக் கொல்லும்படி கட்டளையிட்டதாகப் பொன்சேகா கூறியதாக த லீடர் பத்திரிகையில் ஒரு பிரத்தியேக தலைப்புச் செய்தி வந்துள்ளதே?

பதில் - அது பிழையான தகவல். நான் கோனாவின் கூற்றைப் பார்க்கும்படி கூறுவேன். அதைத் தயவு செய்து வாசியுங்கள். கோனா கூறுகிறார் அந்தச் செய்தி பொய் என்று. அந்தப் பத்திரிகைச் செய்தி சரியானதல்ல. ஜெனரலும் அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார். நேற்றுப் பேராசிரியா றஜீவ் விஜையசிங்கா ஐ.நா வுக்கு அப்படியொன்றும் நடைபெறவில்லை என்றும் ஐ.நா அதுபற்றிக் கவலைப்பட வேண்டாமென்றும் எழுதியுள்ளார்.

கேள்வி - ஜெனரல் பொன்சேகா அப்படியொரு கூற்றைக் கூறவில்லை என்று பரிபூரணமாக நிராகரிக்கவில்லை. இப்பொழுது சொல்கிறார் வெளியிற் கூறமுடியாத ஒரு செய்தியாளர் கூறியதாகக் கூறுகின்றார். ஓரு முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் எவ்வாறு இவ்வாறான பொறுப்புணர்ச்சியற்ற கூற்றுக்களைக் பகிரலாம்.

பதில் - ஆராவது அவரது செவ்வியின் ஒலிப்பதிவோடு வந்தார்களா? அவர் என்ன சொன்னார் என்பதை முதலிற் கேட்டுப்பார்க்க வேண்டும். நான் அவர் என்ன சொன்னார் என்று கேட்டேன். ஒருவரும் வெள்ளைக் கோடியோடு வரவுமில்லை என்றும் ஒருவரும் கொல்லப்படவுமில்லையென்றும் கூறினார். அந்தச் சம்பவத்தின் சாராம்சம் அவ்வளவுதான்.

கேள்வி - அந்த நேர்காணலை அந்தப் பத்திரிகையின் ஆசிரியரே செவ்விகண்டார். அவர் தனது நிலைப்பாட்டிலேயே நிற்கின்றே?

பதில் - அப்படியானால் அவர் பதிவு செய்த கூற்றோடு வரட்டுக்கும். அப்படி பதிவை கொண்டு வராதவரைக்கும் நாம் அதை நம்பப் போவதில்லை.

கேள்வி - உங்களுடைய கட்சியின் சொந்த அனுபவமென்னவென்றால், உங்களது மறைந்த தலைவரான றோகண விஜையவீராவை கைதுசெய்து அவர் தனது பிள்ளைகளை ஒருதரம் பார்க்க விடும்படி கெஞ்சிக் கொண்டிருக்கையிலேயே அவரை உயிரோடு எரித்த கட்சியினரோடும், உங்கள் கட்சியினரைச் சித்திரவதை செய்வதற்கென்றே பட்டலங்காவில் ஒரு வதைமுகாமை வைத்திருந்தவர்களோடும் இப்பொழுது வசதிக்கேற்ற திருமணம் செய்துகொண்டுள்ளீர்கள். இது ஒரு பெரிய முரண்பாடல்லவா?

பதில் - எங்கள் அங்கத்தவர்களைக் கைதுசெய்யும்படி காட்டிக் கொடுத்தவர்கள் யாரென்று உங்களுக்குத்தெரியுமோ? தோழர்கள் லியனாராய்சியினதும் வன்னிகமவினதும் மரணத்தின் பொறுப்பாளிகள் உச்சியிலே இருக்கிறார்கள். ஏன் இந்த அரசாங்கத்தை அக்கொலைகளுக்கான நீதி விசாரணையைச் செய்து அக்கொலைகளின் பொறுப்பாளிகளைத் தண்டிக்கும்படி கேட்கக் கூடாது. இன்றைக்காவது அந்த விசாரணைகளைச் செய்வார்களா?

கேள்வி - அப்படியென்றால் அது உங்களது மக்களுக்கே மாபாதகம் செய்தவர்களோடு கூட்டுச் சேர்வதற்கான உரிமையை வழங்கி விடுமா?

பதில் - நான் சொல்வது அத்தனையையும் திரிக்காமல் நான் சொன்னதுபோலவே அப்படியே பிரசுரிப்பீர்களா? நீங்கள் அதைத் திரிக்க மாட்டீர்களென்று உறுதி கூறுவீர்களா?

கேள்வி - அவை எவ்வளவுக்கு அவதூறு இல்லாமல் இருப்பதைப் பொறுத்தது. நீங்கள் இன்ன இன்ன ஆட்கள்தான் கொலையாளிகள் என்று சொல்லுவீர்களானால் அதை எம்மால் பிரசுரிக்க முடியாது.

பதில் - ஏன் அரசாங்கம் ஒரு விசாரணையை நடாத்தி அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்கவில்லை?

கேள்வி - நீங்கள் எல்லோரும் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் அதை ஏன் கோரவில்லை?

பதில் - அவர்கள் கொல்லப்பட்ட நாட்களிலிருந்தே அதை நாம் எத்தனையோ தடவை கோரினோம். நாங்கள் அதை மறந்துவிடுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் அதேமட்டத்திற்குப் பொறுப்பாளிகள். அவர்கள் 1971 இல் எங்களை ஓராட்டவில்லை. தயவு செய்து இந்த விடயங்களைப் பிரசுரியுங்கள்.

கேள்வி : அதே நேரத்தில் ஜே.வி.பி காரர்களும் கொடிய செயல்களைச் செய்துள்ளார்கள். விஷேடமாக யூ.என்.பிக் காரர்களுக்கு.

புதில் : அவர்கள் எங்களது தோழர்களை எந்தவித நீதி விசாரணையும் இன்றிக் கொன்றுள்ளார்கள். ஜே.வி.பி இந்த நாட்டில் ஜனானயகத்தை அனுமதிக்கவில்லை என்று சொல்லியே செய்தார்கள். அதுதான் தொடக்கம். இதை சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் செய்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் செய்தது.

கேள்வி : உங்களது தோழர்களை இந்த நாட்டில் ரயர்குவியல்களுக்குமேல் போட்டு எரித்த காலங்கங்களில் மனித உரிமைக்கான நல்ல காரியங்கள் செய்யும் இந்தச் சர்தேசவாதிகள் ஒருவரும் வரவில்லை. ஆனால் இப்பொழுதோ வரலாறு கண்ட கொடிய பயங்கரவாதத் தலைவர்களுக்காக நீதி கோருவது விசித்திரமில்லையா?

பதில் - அது 89 திலும் அதன் பின்பும் வந்தது. 1971 இல் பிரபு டுழசன யுடிநசநரசல இந்த நாட்டுக்கு வந்து எல்லா அரசியற் கைதிகள் உள்ள சிறைச்சாலைகளையும் பார்வையிட்டு சிறிலங்கா அரசுக்கெதிராihன தனது எதிர்க்குரலை வெளிப்படுத்தினார். அதற்காகவே பிறின்ஸ் குணசேகரா சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அடுத்ததாக பல நாடுகளும் பல தூதரகங்களும் 1980 களில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி அக்கறை கொண்டன. பிரித்தானியத் தூதரான கிளாட்ஸ்ரோன் இந்த நாட்டிலிருந்து வெயியேற்றப்பட்டார். நீங்கள் வரலாற்றை மறந்து விட்டீர்கள்.

கேள்வி : நான் என்னத்தைச் சொல்ல வருகிறேன் என்றால் எண்பதுகளின் பிற்பகுதியில் தெருவோரங்களில் எரிந்த உடலங்கள் நாளாந்தம்; கிடப்பதை நாம் பிரசுரித்தோம். அந்த நாட்களில் இப்படியொரு சர்வதேசக் காட்டுக்கூய்ச்சல் ஏதும் இருக்கவில்லை.

பதில் : இப்பொழுது மாற்றங்கள் வந்துள்ளன என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால்; நீங்கள் ஏதும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிப் பிரசுரித்ததாக நான் காணவில்லை. அந்த நாட்களில் றிச்சாட் சொய்ஸ்சா ஜே.வி.பி க்காகக் குரல்கொடுத்தார்.

கேள்வி : எங்களது பெயர்கள் வெளியில் வராமல் இருக்கலாம். நாங்கள் எந்த மட்டத்திற்கு எமது கடமையைச் செய்ய முடியுமோ அந்தளவுக்குச் செய்துதான் இருக்கிறோம். நீங்கள் அந்த நாட்களில் இந்த நாட்டில் இல்லாமல் இருந்திருக்கக் கூடும்.

பதில் : நான் இந்த நாட்டிலேயே இருந்தேன். அது எப்படி உங்களுக்குத் தெரியும்.

கேள்வி : நீங்கள் தப்பி ஓடவில்லை?

பதில் : நான் தப்பி ஓடவில்லை. நான் கொலைசெய்யப்படுவதைத் தடுத்திருந்தேன். நீங்கள் இப்பொழுது நான் இங்கு இருப்பதை எண்ணிக் கவலையடைகிறீர்கள். நீங்கள் எல்லோருமே நான் இப்பொழுது இங்கே இருப்பதை எண்ணிக் கவலை அடைகிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

கேள்வி : யூ.என்பி தலைவர் றணில் விக்கிரமசிங்கா தான் அடுத்த நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரென்று திருப்பித் திருப்பிச் சொல்லியிருந்தார் . அதற்கு முன்னதாகச் சரத்பொன்சேகாவும் ஆட்சி அதிகாரத்தை அவரிடம் கையளிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

பதில் : நீங்கள் உண்மைகளைத் திரிக்கிறீர்கள். தயவு செய்து முதலில் உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி:- தயவு செய்து கடந்த ஞாயிற்றுக் கிழமையின் த லீடர் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை வாசித்துப் பாருங்கள்.

பதில் : எனக்கும் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதம மந்திரியாக வரவேண்டும் என்ற விருப்பமுண்டு. அது எல்லோரது விருப்பமும் ஆகும். இலங்கையின் பிரதமராவதற்குப் பலருக்கு ஆவலாகவுள்ளது. நாங்கள் இந்தநாட்டிற்கு ஒரு நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதம மந்திரி ஒருவரைக் கொண்டுவருவதற்காகப் போராட வில்லை. நிறைவேற்று அதிகாரமுறை போதும் போதும் என்றாகி விட்டது. நிறைவேற்று அதிகார முறை என்பதையே மறந்துவிட வேண்டும்.

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் எதற்காகப் போராடுகிறீர்கள்?

பதில் : எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கே போராடுகிறோம். நாங்கள் குடும்பக் கொள்ளைக்காரருக்கு எதிராக, இனபந்துக்களை அதிகாரத்தில் இருத்துவதற்கெதிராகப் போராடுகிறோம். நாங்கள் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம். நாங்கள் அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கெதிராகப் போராடுகின்றோம். ஊடகங்களை ஒடுக்குவதற்கு எதிராகப் போராடுகின்றோம். இந்த நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு எதிராகப் போராடுகின்றோம். நீங்கள் இவைகளையும் எழுத உடன்படுகின்றீர்களோ?

கேள்வி : நீங்கள் பதிந்ததைக் கேட்பதற்கு உரிமை உடையவர்கள்.


பதில்- மிக்க நன்றி.

கேள்வி:- போன கிழமை நீங்கள் சன்டேரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில்; ஊடகங்களை ஒரவஞ்சகமில்லாமல் நடக்கும்படி நம்பச் செய்யப் போவதாகக் கூறியுள்ளீர்கள். இது ஒரு பெரிய கற்பனையான விடயம். இதை எவ்வாறு நடைமுறைப் படுத்தப் போகிறீர்கள்.

பதில் - என்ன மாதிரி பிரிவினை வாதத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்பதை இந்தநாட்டுமக்களை எப்படி நம்பச் செய்தோமோ அதேபோலவே ஊடகங்களையும் பாரபட்சமின்றி நடப்பதை ஏற்கும்படி செய்யவேண்டும். ஒருவரும் பிரிவினைவாதம் பற்றிக் கவலைப்படுவதில்லை. எங்களது ஒரோயொரு கட்சி மாத்திரம்தான் 1975 தொடக்கத்திலிருந்தே பிரிவினைவாதத்திற்கு எதிராகப் போராடியது. அந்தக் கொள்கையில் நாம் திடமாக இருந்தோம். வென்றோம்.

கேள்வி - நாங்கள் இரண்டு வித்தியாசமான விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமா?

பதில் - இப்படித்தான் நாம் மக்களை நம்பச் செய்தோம். ஆகவே எங்களுக்கு உறுதி வேண்டும். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள்; மக்களையும் ஊடகங்களையும் நம்பச் செய்ய வேண்டும்.

கேள்வி - அது ஒரு பெரிய விடயமாகும்.

பதில் - நம்பப் பண்ணுவது பெரிய விடயமல்ல.

கேள்வி - கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு ஊடகங்கள் நடந்துகொண்டன என்பதை நாம் கண்டோம்.

பதில் - எவ்வளவு கேவலமாக நாட்டில் ஊடகங்கள் நடந்துகொண்டன என்பதைக் கண்ணுற்றோம். எல்லாமே மாற்றப்பட வேண்டும். நாங்கள் ஒரு மாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். எங்குபோனால் சுதந்திரத்தைச் சுகிக்கிமுடியுமென்று மக்கள் நம்புகிறார்களோ அந்தப் புதிய சகாப்தத்துள்; நாம் புகுந்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி - ஊடக முறையீட்டுக் குளுச் சட்டத்தை ரத்துச்செய்யப் போவதாக எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர்.

பதில் - யார் அப்படிக் கூறினார்கள்.

கேள்வி - சிலவேளை உங்கள் கட்சி சொல்லாமல் இருந்திருக்கலாம். எதிர்க் கட்சிகளுள் உள்ள வேறு சிலர் அண்மைக் காலத்தில் அப்படிக் கூறியிருக்கிறார்கள். நீங்கள் ஊடகங்களினுள்ளே தனியார் ஊடகங்கள் உட்பட நடுவுநிலையைப் பேணக்கூடிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளதாகக் கூறுகிறார்கள்.

பதில் - நாங்கள் ஊடக தணிக்கையைப் புகுத்துவோம் என்றொரு பதிலை என்னைக்கொண்டு கூறப்பண்ண முனைகிறீர்கள். நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்.

கேள்வி - நீங்கள் சன்டேரைம்சுக்கு அளித்த செவ்வியில் இணங்கி வளைந்து போகக்கூடிய பொருளாதாரக் கொள்கை உள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் பொன்சேகா யூ.என்பியின் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போவதாகக் கூறியுள்ளார். ஆகவே நீங்கள் பொருளாதார முனையில் சமரசப்பட்டுப் போக உள்ளீர்களா?

பதில்:- தயவு செய்து நாங்கள் என்னத்தைச் செய்யப் போகிறோம் என்பதை விளங்குங்கள். எமது இலக்கு என்னவெனில் இந்தப் பாராளுமன்ற கால எல்லை முடிவதற்கு முன்னதாக ஒரு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்தக் கூடிய ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கொள்கைகளோடு வருவார்கள். அங்கே குறைந்தது மூன்றுமுனைப் போட்டிகள் நடைபெறக் கூடும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது சிறிலங்காசுதந்திர முன்னணியின் கொள்கை. அந்தக் கூட்டிலே வேறு எந்தக் கட்சியின் போக்குமில்லை. அடுத்தது ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை. மற்றயது ஜே.வி.பியினது கொள்கை. புதிய ஜனாதிபதி சரத்பொன்சேகா தனது கொள்கையைக் கொண்டிருப்பார். அவர் என்னத்தையும் நம்பக் கூடும். அப்படி ஏன் இருக்கக் கூடாது. அவர் ஒரு சுயாதீனமான ஒரு கட்சிக் கொள்கையையும் பின்பற்றாத சுயாதீனமான மக்களின் பொதுவான வேட்பாளர். அவர் தனக்கொரு சொந்தக் கொள்கையை வைத்திருக்கக்கூடும். ஆகவே எங்களைப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிடுங்கள். இந்த நாட்டு மக்கள் எதை நம்புகிறார்களோ அதை ஏற்க விடுங்கள்.

கேள்வி - இதுதான் கறாராக மக்களால் எதிர்க்கப்படுகிறது. நீங்கள் ;இருட்டினிலே கறுப்பைத் தேடுகிறீர்கள். உங்களுக்கே தெரியாத ஒருவரைப் பொது வேட்பாளராக ஊக்குவிக்கிறீர்கள். இது ஒரு தூய சந்தர்ப்பவாதமாகும். நீங்கள் ராஜபக்ஸ்சவைத் துலைத்துக் கட்டுமுகமாக பேயோடுகூடச் சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறீர்கள்.

பதில் - யார் சந்தர்ப்பவாதி? ராஜபக்ஸ்ச ஒரு சந்தர்ப்பவாதி. இந்த நாட்டால் உருவாக்கப்பட்ட ஒரு கேவலமான சந்தர்ப்பவாதிதான் ராஜபக்ஸ்ச. அவருக்கு ஏன் இப்பொழுது ஜனாதிபதித் தேர்தல் தேவையாக இருந்தது. அதன் பின்பு எனது விடையை நான் கூறுவேன். ஆதலால்தான் இன்று இதை நாம் கலந்துரையாட வேண்டியுள்ளது. இன்னும் இரண்டுவருடம் அவரால் ஆட்சிசெய்யக் கூடியதாக இருக்கும்போதுங்கூட அவர் ஏன் இப்பொழுது ஜனாதிபதி தேர்தலை வைத்தார்? அவரால் அதிசயங்கள் செய்ய முடியுமே! அவரால் அற்புதங்கள் செய்ய முடியுமே!!

கேள்வி - தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வழமைக்கு மாறாக இரண்டு தேர்தல்களையும் வைக்க யோசித்திருக்கலாம். அதைத் தீர்ப்பதை மேலும் நீடிக்க முடியாது.

பதில் - ராஜபக்ஸ்சவுக்குச் சார்பாகப் பேசாதீர்கள். ஏன் அவர் ஜனாதிபதித் தேர்தலை வைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமோ? லக்ஸ்மன் ஜாப்பா அபயவர்த்தனாவைக் கேட்டுப் பாருங்கள். அவர் சொன்னார் 'நாங்கள் யுத்தத்தை வென்றதால் எமக்குச் சாதகமான நிலையில் உள்ளோம். எப்பொழுது நாம் தேர்தலை வெல்ல முடியுமோ அப்பொழுதுதான் தேர்தலை வைக்க வேண்டும்.' இதிலிருந்து அவர் இன்னும் இரண்டு வருடம் காத்திருந்தால் அவரால் வெல்ல முடியாது என்பது விளங்கும். ஏன் இப்பொழுதுங்கூட அவரால் வெல்ல முடியாது. அவரோடு எவராலும் எதிர்த்துப் போட்டி போட முடியாது என்று அவர் எண்ணினார். ராஜபக்ஸசவை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஜெனரல் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

கேள்வி:- ஏன் இங்கிலாந்திலுங்கூட ஆட்சியதிகாரத்தில் உள்ள கட்சி தனக்குச் சாதகமான தருணம் என்னுங் காலத்தில்தான் தேர்தலை வைக்கும்.

பதில் - சிறிலங்காவில் அப்படி இ;ருக்கக் கூடாது. நாங்கள் எல்லாவற்றையும் பிரித்தானியக் கட்சிகள் செய்வது போல ஒரு போதும் செய்யக் கூடாது. நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். இந்தத்தேச மக்கள் பிரித்தானிய அரசையும், பிரித்தானிய அரசியற் கட்சிகளையும் பின் பற்றினால்....

கேள்வி - ஆகவே நீங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதம மந்திரி முறையை எதிர்க்கிறீர்கள். அப்படியென்றால் என்னவிதமான முறையைக் கொண்டுவரப் பாடுபடுகிறீர்கள்.

பதில் - நாங்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவரப் போகின்றோம். நாங்கள் அதிகாரத்தைப் பாரளுமன்றத்திற்கு மாற்றப் பாடுபடுகின்றோம். அதாவது வெகுசனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அந்த அதிகாரம் மாற்றப்பட வேண்டும். அதாவது பாரளுமன்றத்திற்கே அதிகாரம் இருக்க வேண்டும்.

கேள்வி - றணில் விக்கிரமசிங்கா பிரதம மந்;திரியாக இருந்த பொழுதே புலியோடு ஒரு சட்டவிரோத சமாதான ஒப்பந்தத்தை எழுதினார். பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரனாயக்கா தேர்தல் இல்லாமல் பராளுமன்றத்தை இரண்டு வருடங்களால் நீடித்தார்.

பதில் - நாங்கள் அதை எதிர்த்தோம். இப்பொழுது சமாதான ஒப்பந்தம் பற்றிப் பேசுவதற்கே இடமில்லை. இந்த ராஜபக்ஸ்ச அரசாங்கமே சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து ஜெனிவாவில் புலியோடு பேச்சுவார்த்தை நடாத்தியது. எவ்வாறு இதற்கு விடையிறுப்பீர்கள்.

கேள்வி - அவர் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே சர்வதேச ஊடகங்களும் மற்றும் உள்நாட்டு எதிர்க் கட்சிகளும் அவர் ஒரு கடும்போக்காளர் என்றும் யுத்த மொங்கான் போடுபவர் என்றும் பிரச்சனையைச் சிக்கலாக்குவாரென்றும் கூறியதால் அவர் சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கத் தன்னால் ஆனமட்டும் முயற்சித்தார்.

பதில் - நீங்கள் ராஜபக்ஸ்சவைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறீர்களா? அவர் நீங்கள் சொல்வதைக் கொண்டு வெளியில் வரட்டுக்கும். அவருக்கு எந்தவொரு ஞானமுங் கிடையாது. இவர் ஒரு தீர்கதரிசனம் இல்லாத மனிதர்.

கேள்வி - உங்களுக்கு ஞானமிருக்கக் கூடும். உண்மை என்னவென்றால் தேர்தல் என்று வந்தால் மக்கள் யூ.என்பியை அல்லது எஸ்.எல் எப் பியைத்தான் ஆட்சிக்குத் தேர்ந்தெடுப்பார்கள்.

பதில் - எப்படி உங்களுக்குத்தெரியும். நாங்கள் வெற்றிவாகை சூடுமட்டும் யாரும் ஜே.வி.பி வெல்லாது என்று கூற முடியும். நாம் வென்றபின்பு நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களது பத்திரிகை 1989 இல் ஜே.வி.பி மீண்டும் தலை உயர்த்த மாட்டாது என்று சொன்னது. நாங்கள் நாட்டில் ஒரு சக்திமிக்க அரசியற்கட்சியாக வந்துள்ளோம். உங்களது எதிர்வு கூறுகைகள் எதிர்காலத்துக்கப் பெறுமதி இல்லாதவை.

கேள்வி - நீங்கள் எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் வாக்களிப்பு என்று வந்துவிட்டால் மக்கள் யூ.என்.பிக்கு அல்லது எஸ்.எல்.எப்.பி க்குத்தான் வாக்களிப்பார்கள்.

பதில் - எங்களை விசுவாசமுள்ளவர்கள் என்று ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. அதிலிருந்தே நாம் மக்களை நம்ப வைத்து தேர்தலை வெல்லமுடியும் என்ற முடிவுக்கு வரலாம். இந்த நாட்டு மக்கள் ஜேவிபி க்கு ஒருநாள் வாக்களிப்பார்கள். அவர்களைத் தீர்மானிக்க விடுவோம். நீங்களோ உங்களது பத்திரிகையோ அதைத் தீர்மானிக்கத் தேவையில்லை.

கேள்வி - அடுத்த மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன. உங்களது கூட்டு என்னவாகும்.

பதில் - எந்தக் கூட்டு? எந்தக் கூட்டு? அப்படித்தான் நீங்கள் எல்லோரும் எழுதுகிறீர்கள். அப்படி ஒரு கூட்டும் கிடையாது அப்படி இருக்கும்பொழுது அந்தச் சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள்.

கேள்வி - பொதுத் தேர்தலிலே நீங்கள் எல்லோரும் யூ.என்.பியோடு ஒத்துப் போவீர்களோ?


பதில் - இல்லை. இதோடு போதும்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com