துஸ்பிரயோகம் இடம்பெறவில்லை : ஊடகங்களுக்கு ஜனாதிபதி செயலகம்.
அரசபணம் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தபடுவதாக ஊடகங்களில் வெளிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
சில ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கான தேர்தல் பிரச்சாரங்களின் நிமிர்த்தம் அலறிமாளிகையில் உணவு வழங்குதல் , அதற்கான வாகனப் பிரயோகங்கள் , கட்டிடங்கள் மேலும் பல விடயங்கள் அரச செலவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி செயலகத்தினராகிய நாம் சுட்டிக்காட்ட விரும்புவதுடன், அங்கு இடம்பெறும் நிகழ்வுகளுக்கான செலவினங்கள் கட்சியின் பணத்திலிருந்தும், சில கட்சி நலன்விரும்பிகளின் நன்கொடையிலுமே இடம்பெறுகின்றன என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இவ்வாறான ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்களை மேற்கொள்பவர்கள் அவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment