தடுப்பு மருந்து போத்தலினுள் உடைந்த போத்தல் துண்டு.
Cefuroxine எனப்படும் மருந்தை நோயாளிக்கு ஏற்ற முற்பட்ட வைத்தியர் அம்மருந்துப் போத்தலினுள் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று இருந்ததைக் கண்டு பிடித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்து அனைத்து வயதினருக்கும் உரிய நோய்தடுதப்பு (கிருமிகொல்லி) மருந்தாகும். அனுராதபுரம் வைத்தியசாலையில் சத்திர சிகிச்கைக்கு உட்படுத்தப்படவுள்ள நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை அறையில் வைத்து குறிப்பிட்ட மருந்தினை ஊசி மூலம் ஏற்றுவதற்கு வைத்தியர் தயாரானபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
750 மி.கிராம் தூள் கொண்ட மருந்து குப்பியினுள் பாவனைக்கு முன்னர் 10 மி.லீட்டர் நீர் சேர்க்கப்பட்டு நன்கு குலுக்கப்படவேண்டும். அவ்வாறு வைத்தியர் மருந்தினுள் நீரை சேர்த்து குலுக்கியபோதே அம் மருந்துக் குப்பியினுள் உடைந்த போத்தல் துண்டு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இம்மருந்து இலங்கை பூராகவும் பாவிக்கப்படுவதுடன், அது இந்திய கம்பனி ஒன்றின் உற்பத்தியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment