Saturday, October 17, 2009

அம்பலத்திற்கு வருகின்றது புலிகளின் ஆட்கடத்தல் வியாபாரம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த கப்பல் கம்பனிக்காறர்கள் வலையில் சிக்கும் அபாயம்.
கடந்த 11ம் திகதி அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் சிறியரக சரக்குக் கப்பல் ஒன்று 253 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. இந்தோனேசியக் கடற்பரப்பில் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக கப்பல் நகர்வது தாமதமானபோது இந்தோனேசிய கடற்படையினரால் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது.

கப்பலில் இருந்தவர்கள் „நாம் இலங்கைப் பொதுமக்கள்" என்ற சுலோகத்தை பெயின்றினால் மரப்பலகை ஒன்றில் எழுதி வந்திருந்தனர். அவர்களை சுற்றி வழைத்த இந்தோனிய கடற்படையினர் அவர்களுக்கு மனிதாபிபான ரீதியில் இந்தோனேசியாவில் தங்குவதற்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரித்தானிகராலயத்திடம் பாரமளிக்க முன்வந்திருந்தனர். ஆனால் மக்கள் இந்தோனேசிய அதிகாரிகளின் முன்மொழிவை நிராகரித்திருந்தோடு தம்மை அவுஸ்திரேலியா, நியுசிலாந்து அல்லது கனடா பாரமெடுக்கவேண்டும் எனவும் அன்றேல் தாம் கப்பலிலேயே சாகும்வரை உண்ணாவிரம் இருக்கப்போவதாவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய பிரதர் இவ்விடயம், இந்தோனேசிய கடல் எல்லைக்குட்பட்டவிடயம், இதற்கான முடிவை அந்நாட்டு அரசாங்கம் எடுத்துக்கொள்ளட்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறிப்பிட்ட ஆட்டகடத்தல் வலையமைப்பை கண்டுபிடிக்கும் நோக்கில் கடத்தல் முகவர்கள் தொடர்பாக கப்பலில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் வினவியபோது, கடத்தல் காரர்கள் சர்வதேசவலை அமைப்பை கொண்டுள்ள அதிபயங்கர கும்பல் எனவும் அவர்களது பெயர்களை வெளிவிட்டால் தமது புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கும் இலங்கையில் உள்ள குடும்பத்தவர்களுக்கும் உயிராபத்து ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் குறிப்பிட்ட ஆட்கடத்தல் வியாபாரம் புலிகளின் சர்வதேச கப்பல் வியாபாரக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக்கண்காணிப்பில் இயங்கிய கப்பல் கம்பனிகளின் நிர்வாகிகளான பிரித்தானிய பிரஜாவுரிமையை கொண்டுள்ள சங்கர், நோர்வே பிரஜாவுரிமையை கொண்டுள்ள ஸ்டீபன் ராஜா, ஆகியோருடன் ஜேர்மன் பாபு, பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன், மலேசியாவில் வசிக்கும் கண்ணன் , டானியல் ரொனால்ட் அல்லது சுகு, இந்தோனிசியாவில் வசிக்கும் மதி ஆகியோர் இப்பாரிய மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இவர்களில் ரொனால்ட் அல்லது சுகு என அழைக்கப்படுபவர் மலேசியாவில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர் என்பதுடன் புலிகளின் சர்வதேச நிதியை கையாள்பவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இவர் புலிகளின் பணத்தில் மலேசியாவில் ஆடம்பர மாளிகை மற்றும் வாகனங்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இவர் சோதியுடன் என்பவருடன் இணைந்து வன்னி இடைத்தங்கல் முகாம்களில் உள்ள புலி உறுப்பினர்களை வெளியே கொண்டுவந்து அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு கப்பல் வாங்கவேண்டும் என கனடா வாழ் மக்களிடம் 3 லட்சம் டொலர்களை சேகரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு வன்னி முகாம்களில் சிக்கியுள்ளதான புலி உறுப்பினர்களை மீட்கவென சேகரித்த 3லட்சம் கனடிய டொலர்களில் 35000 அமெரிக்க டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத கப்பலொன்றை வாங்கி அக்கப்பலில் 30 புலி உறுப்பினர்களும் 223 பொதுமக்களும் ஏற்றப்பட்டுள்ளனர். இதில் 223 பொதுமக்களிடமும் தலா 15000 அமெரிக்க டொலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளதுடன் சிலரிடம் முழுப்பணமும், சிலரிடம் பகுதிப்பணமும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்றப்பட்டுள்ள 30 புலி உறுப்பினர்களின் உறவினர்களிடமும் குறிப்பிடத்தக்க பணம் பெறப்பட்டுள்ளமை உறிதியாக தெரியவருகின்றது.

மக்களின் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் முற்றிலும் வியாபரநோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயலானது இலங்கையில் இருந்து அகதி அந்தஸ்து கோரும் நியாயமான அச்சுறுத்தல்கள் உள்ளோரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் குறிப்பிட்ட கப்பலில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தம்மை இலங்கைத் தமிழர்கள் எனவும் வன்னியில் இருந்து பல இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்களில் எவரும் தமது வாழ்நாழில் வன்னியை கண்டிருப்பார்கள் என்பது சந்தேகம். அங்குள்ள குழந்தைகள் நிச்சயமாக சிறந்த ஆங்கில மொழிமூல பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கவேண்டும் என்பது அவர்களது ஆங்கில உச்சரிப்பில் விளங்கின்றது. பார்வைக்கு மிகவும் செல்வந்தர்களாக விளங்கும் குறிப்பிட்ட குழுவினரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு உலகில் இடம்பெறும் இவ்வியாபாரம் உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் நிவாரணத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை இவர்கள் எள்ளளவும் சிந்திக்கப்போவததில்லை.

ரொனாலட் சோதி போன்றோர் மலோசியாவில் பயங்கரவாத பாதளாகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலோசியாவிக்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும் மிரட்டியும் பணம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவருகிறது. அண்மையில் மலேசியா சென்றிருந்த தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை கடத்தி பெருந்தொகைப் பணத்தினை (?? லட்சம் டொலர்களை) பெற்றுவிட்டு அவரை விடுவித்த சம்பவமும் குறிப்பிடதக்கது.

எது எவ்வாறாயினும் சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ள குறிப்பிட்ட கப்பல் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் குறிப்பிட்ட கப்பலில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இக்கும்பலின் துரோகங்களை உணர்ந்திருப்பர். அவர்கள் அங்கு இடம்பெறும் விசாரணைகளின் போது நிச்சயமாக தாராளமான தரவுகளை வழங்குவர். அப்போது இக்கும்பல் கைதுசெய்யப்படும் என்பதுடன் புலிகளின் புலம்பெயர் தேசத்தில் எஞ்சியுள்ள பலமும் தகரும் எனவும் பல கோடி சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் கப்பலில் உள்ள மக்கள் உண்ணாவிரம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் பர்க்கர் விவகாரத்துடன் தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு உலகமட்டத்தில் இருந்த கிராக்கி இறங்கியுள்ளதென்பதை அம்மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com