8 பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 1,220 பேர் வவுனியாவிலிருந்து வந்தனர்
நேற்றிரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வவுனியா அகதிமுகாம்களில் இருந்து குடாநாட்டின் எட்டுப் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 1,220 பேர் நேற்று இங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உடனடியாகவே நேற்றிரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
அகதிகள் உறவினர்களுடன் வீடுகளுக்கு செல்வதற்கு வசதியாக நேற்றிரவு ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தது. வவுனியாவிலிருந்து இதுவரை முறைக்கு முறை அழைத்து வரப்பட்டவர்களில் எண்ணிக்கைகளை விட நேற்றைய எண்ணிக்கை மிக அதிகமாகும்.கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 14 ஆம் திகதி வரை மொத்தம் 10,886 பேர் வவுனியா முகாமிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அப்போதெல்லாம் சராசரி ஆகக்கூடியது 600 தொடக்கம் 500 பேர்களே அழைத்துவரப்படுவது வழமையாக இருந்தது.வவுனியா நலன்புரி நிலையங்களி லிருந்து 408 குடும்பங்களைச் சேர்ந்த 1220 பேர் நேற்று அழைத்துவரப்பட்டனர். அவர்கள் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.வவுனியாவில் இருந்து 20 பஸ்களில் அழைத்து வரப்பட்ட இவர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்தவகளே நேற்று அழைத்தவரப்பட்டனர்.
அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல வசதியாக நேற்றிரவு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.தனித்தனியாக பிரதேச செயலக ரீதியாக துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மக்கள் ஒப்படைக்கப்பட்டனர்.நேற்றிரவு இரவு 7மணிமுதல் பதிவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று அரச அதிபர் கே.கணேஷ் உரையாற்றுகையில் இங்கு வந்துசேர்ந்த சகலருக்கும் ஆறுமாத காலத்துக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கப்படும். உலர் உணவு அல்லாத பொருள்களை அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் வழங்கவிருக்கிறது.அத்துடன் மீளக்குடியமரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25.000 ரூபா வழங்கப்படும் அதில் 5000 ரூபா பணமாக வழங் கப்படுவதுடன் 20,000 ரூபா அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும்.மேலும் இருப்பிடமில்லாதவர்களுக்கு தற்காலிக குடியிருப்புக்களை அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அரசஅதிபர்.
0 comments :
Post a Comment