Friday, June 19, 2009

அமெரிக்க ஜெர்லைனர் விமானத்தின் விமானி திடீர் மரணம். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பிறேசில்ஸ் நகரில் இருந்து நியூஜேர்சி நகரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த Continental Flight 61 இன் விமானி திடீர் என இயற்கை மரணத்தை எய்திய போதும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக Continental Airlines இன் மாநில விமானப்போக்குவரத்து நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நியூவார்க்கைச் சேர்ந்த 60 வயதான விமானி இறந்ததை யிட்டு விமானத்தில் இருந்த மேலதிக விமானி 247 பயணிகளை ஏற்றிச் சென்ற அவ்விமானத்தை தனது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து Newark International Airport இல் வியாளக்கிழமை காலை 11.49 மணிக்கு தரையிறக்கியுள்ளார்.

விமானத்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக பயணிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதா என சீஎன்என் ஊடகவியலாளர்கள் கேட்டபோது பதிலளித்த பயணிகள், விமானத்தில் இருந்திருக்க கூடிய வைத்தியர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை தவிர தமக்கு எதுவும் தெரியாது என கூறினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com