நிதி அனுப்புவதை தடுக்க சதி: கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.
அதிமுக திரட்டிய நிதி, இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உதவ, செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நிதி அனுப்ப முடியாது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதைப் பார்க்கும்போது அதிமுக சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களைச் சென்றடையாமல் தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.
எனக்கும் (ஜெயலலிதா) அதிமுகவுக்கும் கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்துள்ளேன். அதுபோல இந்தத் தடையையும் முறியடித்து இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக திரட்டிய நிதி செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்பப்படும்.
0 comments :
Post a Comment