ஐ.தே.க யின் அனைத்து வேட்பாளர்களும் தம்மிடமுள்ள சொத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ரவி கருணாநாயக்க
எதிர்வரும் மேல்மாகாண சபைத்தேர்தலிலே நிற்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் 46 வேட்பாளர்களும் தேர்தலுக்கு முன்னர் தம்மிடமுள்ள சொத்துக்களை பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்கவுள்ளனர். அவ்வாறு செய்யத்தவறுகின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (மார்ச் 11) ஜெயவர்த்தன ஞாபகார்த்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுடன் ரவி கருணாநாயக்க அவர்கள் பேசும் போது மேல் மாகாண வேட்பாளர்களில் ஒருவரான ஸ்ரீலால் லக்திலக என்பவர் தனது சொத்துக்கள் தொடர்பான விபரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். திரு. ஸ்ரீலால் லக்திலக அவர்களே தமது சொத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்திய முதலாவது வேட்பாளர் ஆவார்.
0 comments :
Post a Comment