புலிகளின் மோட்டார் மற்றும் கன்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு.
முல்லைத்தீவு பிரதேசத்தில் செயற்படுகின்ற 57ம் படையணியினர் நேற்று (மார்ச் 2) மேற்கொண்ட தேடுதல்களின் போது விசுவமடுப்பிரதேசத்தில் புலிகளுடைய பாரிய வெடிகுண்டு மற்றும் மோட்டார் தொழிற்சாலை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். மேற்படி தொழிற்சாலையில் உலோகம், கிரனைட்கற்கள், இரும்பு மற்றும் இரசாயனப்பொருட்கள் கொண்டு மேற்படி வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மிதிவெடிகள், கன்ணிவெடிகள், கவசஅழிப்பு வெடிகள், நேரம்குறித்து வெடிக்க கைக்கும் (Timebomb) கிளைமோர் குண்டுகள் மேலும் பல வெடிகுண்டுகளுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் குண்டுகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இரும்புக்கேடர்கள், கோடிக்கான சன்னங்கள் தண்ணிசூடாக்கிகள் (Boilers) தொழிற்கருவிகள் உதிரிப்பாகங்கள் என ஏகப்பட்ட பொருட்களைப் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
0 comments :
Post a Comment