வெற்றிலைக்கேணியில் தற்கொலைத் தாக்குதல்.
ஆனையிறவிற்குத் தெற்கே வெற்றிலைக்கேணிப்பிரதேசத்தில் தற்தொலைத்
குண்டொன்று வெடித்துள்ளது. 16-26 வயது வரை மதிக்கத்தக்க பெண்ணொருவர் படையினரை இலக்கு வைக்கும் பொருட்டு இப்பிரதேசத்தினுள் பதுங்கி முன்னேறி வந்துள்ளார். ஆனால் படையினரது கண்களில் அகப்பட்டு கொண்டதுடன் இவரை படையினர் அவதானிக்க தொடங்க தனது இலக்கை அடைய முடியாது என்ற முடிவுடன் அப்பெண் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடலில் சுமார் 2.5 கிலோகிராம் குண்டு பொருத்தப்பட்டிருக்கும் என படையினர் சந்தேகிக்கின்றனர்.
0 comments :
Post a Comment