எதிர்வரும் 10ம் திததி முதல் 31ம் வரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படுகின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை எதிர்வரும் 10ம் திகதி முதல் 31ம் திகதிக்குட்பட்ட காலப்பகுதிக்குள் களைய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வி. முரளிதரன் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்விடயத்தை அவர் பூரணமாக ஏற்றுக்கொண்டு ஆயுதக்களைவுக்கு உடன்பட்டுள்ளதாகவும் தெரிய வரும் அதே நேரம் முதலமைச்சர் பிள்ளையான் ஆயுதக்களைவுக்கு உடன்பட்டிருந்தாலும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதுவரை கிழக்கு மாகாணத்தில் 58 காரியாலயங்களைப் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர். அவற்றில் 27 காரியாலயங்கள் பிள்ளையானது 31 காரியாலயங்கள் முரளிதரனதுவாகும். இவற்றில் பெரும் எண்ணிக்கையான காரியாலயங்கள் அம்பாறை மாவட்டத்தில் இனியபாரதி அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment