Monday, March 9, 2009

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும்: ஜெயலலிதா



இலங்கைத் தமிழர்களுக்காக அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி: ஜெயலலிதா அறிவிப்பு


இலங்கையில் வாழும் தமிழர்களும் சிங்களர்களும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் அக்கட்சியினர் இன்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்னையில் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்று கூறினால் அது மத்திய அரசின் பொறுப்பு என்கிறார். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா அளித்துவரும் ஆயுதங்களும், வெடி பொருட்களும் அங்கு வாழும் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராகதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இலங்கை தமிழர்ப் பிரச்னையில் எங்களின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்த ஓன்றுதான். அதாவது சட்டத்தின் முன் தமிழர்கள் சிங்கள மக்களுக்குச் சமமாக நடத்தப்படவேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், அந்நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு இலங்கைக்குள்ளேயே தமிழர்களுக்காக ஓரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். என்ற அவர் தமிழர்களின் நிவாரணப் பணிக்காக அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்நிதிக்காக தனது சொந்தப்பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபா வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com