விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சரானார். (திருத்தம் )
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விநாயக மூர்த்தி முரளிதரன் இன்று (மார்ச் 09) தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்தற்ற) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பெருந்தொகையான மக்கள் அலறிமாளிகைக்குச் சென்றிருந்ததுடன் கிழக்குப்பிரதேசத்தில் இருந்து சுமார் 2000 பேர் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாக அலறிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment