Monday, March 9, 2009

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்; புலிகளின் 80 சடலங்கள், ஆயுதங்கள் மீட்பு



புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 80 புலிகளின் சடலங்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளில் இராணு வத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களுக்கு பின்னர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல்களின் போதே புலிகளின் 80 சடலங் களும் பெருந் தொகையான ஆயுதங்களும் மீட்கப்பட்ட தாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சிறிய பிரதேசத் திற்குள் முடக்கி விடப்பட்டுள்ள புலிகள் புதுக்குடியிருப்பு மற்றும் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னரங்குகளை இலக்குவைத்து ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இதனை அவதானித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும் விசேட படைப் பிரிவும் கடுமையான தாக்குதல் மூலம் புலிகளின் ஊடுருவல் முயற்சியை முற்றாக முறியடித்துள்ளனர்.

படையினரின் கடுமையான தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த அவர், இவற்றில் 80 சடலங்கள், ரி – 56 ரக துப்பாக்கிகள் – 268, ரி – 58 ரக துப்பாக்கிகள் – 08, ஆர். பி. ஜி. – 18, இயந்திரத் துப்பாக்கிகள் – 10, 60 மி. மீ. ரக மோட்டார் லோஞ்சர்கள் – 06, 12.7 ரக துப்பாக்கிகள் – 02, சிறிய ரக இயந்திரத் துப்பாக்கிகள் – 02, 40 மி. மீ ரக மோட்டார் லோஞ்சர் - 01, 9 மி.மீ. ரக பிஸ்டல் – 01, எம் 91 ரக ஸ்னைப்பர் துப்பாக்கி – 01, தொலைத் தொடர்பு கருவிகள் – 07, திசைக்காட்டி – 01 மற்றும் பெருந்தொகையான உபகரணங்கள் என்பவற்றை இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தோல்வியின் இறுதிக் கட்டத்திலுள்ள புலிகளின் சகல நடவடிக்கைகளையும் திட்டங்களையும் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com