Thursday, March 12, 2009

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். -கிழக்கான் ஆதம்-



“கோழையான பிரபாகரனை தலைவர் என அழைப்பதை விட உலக நாடுகளே வியக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தலைவரென கூறுவதில் பெருமையடைகிறேன்” -அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)

மூன்று சகாப்த காலமாக சுதந்திரம், தனிநாடு,சுயாற்சி என ஒரு மாய வலைக்குள் நம் மக்கள் சிக்கவைக்கப்பட்டு தங்களின் வாழ் வாதாரங்களை இழந்து மிகவும் கஸ்டமான சூழ்நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் நடந்த போர் நிறுத்த, பேச்சுவார்த்தை நாடங்களென புலிகள் பாவித்த இராஜதந்திரங்கள் எல்லாம் அவர்கள் செய்த தவறான அனுகுமுறையால் அரசாலும் சர்வதேசத்தாலும் தவுடிபொடியாக்கப் பட்டுள்ளன.
இத்தகைய சந்தர்பத்தில் புலிகள் பிரச்சாரங்கள் எவ்வளவு உண்மை தன்மை வாய்ந்தன என்பதை சர்வதேசம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது

உதாரணமாக கூறுவதானால் அண்மையில் டேவிட் பூவாலப்பிள்ளை ஏ.வி.ஓ அஜந்தாவில் மனித உரிமைகள் காப்பகத்தின் ஆராச்சியாளர் திருமதி. அனாவின் கருத்தை மறுத்து
“புலிகள் பொது மக்களை வெளியேற விடாமல் தடுக்கவில்லை என்பதுடன் இரானுவ ஆழ ஊடறுவும் படையணியே மக்கள் வெளியேறும் போது புலிகளின் சீருடையில் இருந்து மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்கிறார்கள்” என்றார். அதை அனாவே மறுத்துவிட்டார் (இதன் உண்மை எல்லோருக்கும் தெரியும்)

என்றாலும் பூவாலப்பிள்ளை ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ளார் அதாகப்பட்டது புலிகளின் இதயத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் இலங்கை இராணுவத்திற்கு உண்டு என்பதை. எதுவாயினும் இன்னும் சில காலம் மட்டும் தாக்கு பிடிக்கக் கூடிய நிலையில் இருக்கும் புலிகளும் மற்றும் அவரது தலைவர்களும் தங்கள் முடிவு என்ன என்பதை தீர்மானிக்க முடியாதவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தீவிர ஆதரவுக் கோஸ்டிகள் மட்டும் இன்னும் யதார்த நிலையை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றன.

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற வரிகள் தூள் கிளப்பி பணம்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. யதார்ததை புரிந்த நாங்களும் அதையே சொல்கிறோம்.
தமிழீழம் நிச்சம் நாளை மீண்டும் மறு பிறவியெடுக்கும் அங்கு சர்வதிகார சக்திகள் அழிக்கப்பட்டு மக்களுக்கு ஒரு புது வாழ்வு பிறக்கும் அது எப்படி இருக்கும் என்பதை
“ஏ 9 பாதை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப் பட்டதும் நடைபெறும் முதல் நிகழ்வு அவ் வீதியின் ஊடாக எமது முஸ்லீம் சகோதரர்களை மேள தாளங்களுடன் யாழ்பாணம் அழைத்து சென்று அவர்கள் வாழ்ந்த தங்கள் வாழ் நிலங்களில் குடியிருக்க ஆவண செய்ய வேண்டும் என்கிறோம் (இது எங்கள் விருப்பு, நிறைவேற்ற ராஜ பக்ஸக்கள் அனுமதிக்க வேண்டுமே?) தமிழ் மக்கள் மத்தியில் உங்களை இன்றும் என்றும் (அண்ணா) காக்கா, (அக்கா) ராத்தா என்று கூடப் பிறந்த சகோதரனாக சகோதரியாக பார்கும் பலரே உள்ளனர். எனவே நம்பிக்கையுடன் வாருங்கள் நாம் இணைந்தே இனியொரு விதி செய்வோம்” -இராஜ்குமார் சூத்திரம்- என்றார் அந்த சகோதரர். அங்கே இரு மொழிபேசும் மக்களும் சந்தோசமாக வாழ்வார்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தாங்களே தீர்வு கண்டு சுதந்திரமாக வாழ்வார்கள்.

அப்போதும் சிறு சிறு பிரச்சினைகள் வரும் அதற்கெல்லாம் அரசியல் ரீதியாக நியாயமான தீர்வு காணப்படும். தமிழ் மாணிலம் என வர்ணிக்கப் படும் தமிழ் நாட்டுக்குள்ளேயே தமிழர்கள், நாம் இப்போது வாழ்வது போன்று கூட சுதந்திரமாக வாழ வில்லை.
சாதி பாகுபாடு, தீண்டாமை, லஞ்சம், ரவுடிஸம் என ஆயிரம் ஓட்டைகுள் அஜஸ்பண்ணியே வாழ்கின்றனர். அத்தனியதிகாரம் உள்ள மாணிலத்தை விட நாங்கள் ஒன்றும் கேவலமாக வாழ வில்லை. எங்கள் மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை பாதுகாப்பு கெடு பிடி, சுதந்திரமான போக்கு வரத்து இப்படி சில அவ்வளவுதான் அதையும் புலிகளை சர்வதேசம் சொல்வதைக் கேட்டு ஆயுதங்களை கீழே வைக்கச் சொல்லுங்கள் அல்லது அவர்கள் தற்கொலை செய்யும் வரை காத்திருந்து அப்புறம் பாருங்கள். தமிழர் அடிமைகளா அல்லது சுதந்திரர்கலா என்று.

ஆயுதத்தை கீழே வைக்கச் சொல்லி நாங்கள் சொல்ல வில்லை சர்வதேசம்தான் சொல்கிறது அதுவே புலிகளின் தலைவரின் உயிரைப் பாதுகாக்கும். அதையும் அதிமேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் 2003 ம் ஆண்டு மாவீர் உறையில் சொன்னார் சர்வதேசத்தை மட்டுமே(மூன்றாம் தரப்பு) புலிகள் நம்புவார்கள் என்று அதையே புலம்பெயர் மக்களின் பணத்தில் இயங்குகின்ற புலிகளின் ஊடகங்களும் வாய் கிழியக் கத்தின.

இப்போது புலிகளின் குள்ள நரித்தனம் தெரிந்து அவர்களைக் காக்க பாவம் என்று ஆயுதங்களை கீழே வைக்கச் சொல்ல, அப்போது நியாயஸ்தமான சர்வதேசம் இப்போது எதிரியாகி விட்டதா? மறுத்து புலிகளும் பூவாலப்பிள்ளை போன்ற எலிகளும் அவர்களின் ஊடகங்களும் இந்தியாவில் ஏதோ ஒரு குப்பத்தில் தலைவராக இருக்கும் கந்தசாமியையும், முனுசாமியையும் பேட்டி கண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் சொன்னதைப் போன்று பிரச்சாரமும் அழுகுரலுமாக இருந்து உருப்படியாக ஒன்றும் நடக்கப் போவதுமில்லை.

ஒரு நாள் தேசிய தலைவரின் நினைவு நாளை முகாரி ராகத்துடன் ஒலி,ஒளி பரப்ப வேண்டியே வரும். காரணம் புலிகளின் ஊடங்கள் பேட்டி காண்கின்ற அரசியல் தலைவர்களின் அறிவை சோதிக்க விரும்பினால் இந்தியாவும், தமிழ்நாடும் ஒன்றா என்று கேட்டுப் பாருங்கள் உடனே இந்தியா என்றால் டில்லி என்றும் தமிழ் நாடு என்பது வேறு நாடு என்றும் சொல்வார்கள்.

இப்படிப் பட்ட உலக அரசியல் தலைவர்களை நம்பி நம்மில் படித்த மக்களும் பின்னால் செல்வதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. வண. மாட்டின் லாதர் கிங் இதை இப்படிச் சொன்னார். “கொடியவர்கள் இழைக்கும் தீன்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சி ஊட்டும் அளவிற்கு மௌனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுற வேண்டும்”

நாளைய தமிழீழம் நிச்சம் ஒன்று பட்ட இலங்கைக்குள் மிகச் சிறந்த மக்களுக்கிடையிலான் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் மலரும். மக்கள் தாங்கள் இது வரை இழந்தவற்றையும் அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் மீண்டும் தங்கள் சந்ததியினர்களுக்கு விட்டுச் செல்ல தயாராக இல்லை. இந்த இருபதைந்து வருட கால அவலங்களில் அவர்கள் பாடசாலைக்கு போய் படிதத்தைவிட உலகையும், அரசியலையும் ஆயுதங்களையும் படித்ததுதான் அதிகம்.

அவர்களுக்கு வழங்கப் பட வேண்டியது ஒன்றே ஒன்றுதான் சர்வதிகார புலிகளின் பிடியிலிருந்து விடுதலை அது மட்டும் அவர்களுக்கு கிடைத்தால் யாரை ஏற்பது யாரை மறுப்பது எந்த அதிகாரம் வேண்டும் எது கூடாது, யார் பிரதிநிதிகள் யார் சதிகாரர்கள் என்பதை அவர்கள் நன்றாக பிரித்தரிவார்கள்.

அவர்கள் இப்போது நன்றாக அரசியல் மயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். நாளை அமெரிக்கா இஸ்ரேல் பிரச்சினைக்கு நம் பாமர மக்களில் இருவரை சமாதானத் தூதுவர்களா கொண்டு சென்றால் அந்தப் போருக்கு எளிமையான தீர்வை எல்லோரும் ஏற்கும் வண்ணம் வழங்குவார்கள். ஈழத்தில் வாழும் மக்களைப் பற்றிய கவலை இனி புலிகளின் பினாமிகளுக்கு வேண்டாம் (மன்னிக்கவும் மக்களைப் பற்றி அவர்கள் என்று கவலைப் பட்டுள்ளார்கள்) உங்கள் தலைவர்களை உயிருடன் காப்பாற்ற உங்கள் அரசியல் ஆராச்சியாளர்கள் குப்பத்து பஞ்சாயத்து தலைவர்களுடன் மட்டும் அலோசனை நடத்திக் கொண்டு மட்டும் இருங்கள்.

ஈழமும் மக்களும் அவர்களுக்கு வேண்டியதை அவர்களே சுயற்சையாக தீர்மானித்து பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்துல்லாவின் வீட்டில் யாழ்பாணத்தில் நாளை அய்யப்பனின் மகளின் திருமண விழா நடக்கும் பிரதம அதிதியாக அபேசெகர வருவார்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

உங்களது நாட்கள், உங்களது வாழ்க்கையின் சிறிய வடிவங்கள், இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. - கார்ல் மார்க்ஸ்
VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com