தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணிக்கு 1 வருடம் சிறை
இந்திய இறையாண்மைக்கு எதிராக மக்களை தூண்டியதாக கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 1 வருடம் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுல்ளார் என்று காவல்துறை கூடுதல் சட்டம், ஒழுங்கு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடந்த 26.2.09 அன்று, திண்டுக்கல் நகரில், பெரியார் திராவிடர் கழகம் ஈழம் எரிகிறது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அக்கழகத்தின் மாநிலத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று உரையாற்றினார்.
கொளத்தூர் மணி தனது உரையில், இந்திய அமைதிப்படையினரால் ஈழத்தில் 8400 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் மற்றும் 1000 பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்றும், இப்படிப்பட்ட மனித அலுவலகத்திற்கு காரணமான, ஆணையிட்ட தலைவனைத் தேடி அந்த நாட்டுக்காரன், இந்த நாட்டிற்கு வந்து சுட்டு கொன்றான் அல்லது வெடித்து கொன்றான் என்றால் அதை எப்படி கொலை என்று சொல்லலாம்? என்றும், அதை ஏன் மரண தண்டனை என்று சொல்லக்கூடாது? என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டுமென்றும், இந்திய அரசு தமிழர்களை மக்களாக எண்ணாது என்றும், எஜமான் பெற்று கொடுக்காமல், நாமே எடுத்து கொள்கிற நிலைக்கு வருவது என்பது தான் முடிவாக இருக்கும் என்றும் பேசினார்.
கொளத்தூர் மணியின் பேச்சு, பொது மக்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக தூண்டிவிடும் வகையிலும், தடை செயப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகவும் இருந்ததால், காவல் துறையினர் அவர் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, அவரை 2.3.09 அன்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
கொளத்தூர் மணி மீது நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு ஆண்டுகாலத்திற்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
0 comments :
Post a Comment