ஜனாதிபதியின் மகன் சிறந்த துப்பாக்கிச் சூட்டு வீரராக தெரிவு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உட்பட ஒரு தொகுதியினர் கடற்படைப் பயிற்சியைப் பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். இவர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவம் திருமலை கடற்படை பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் துப்பாக்கியால் சுடும் சிறந்த வீரருக்கான விருதை யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதியும் பாரியாரும் தமது புதல்வருடன் மகிழ்ச்சி ததும்ப உரையாடியுள்ளனர்.
0 comments :
Post a Comment