Sunday, March 8, 2009

வலையில் சிக்கிய புலி. War Against Terror -கிழக்கான் ஆதம்-



“Those [LTTE] members who are found guilty of violating the cease-fire will be severely punished.” -Anton Balasingham-

புலம்பெயர் மக்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் எதுவும் அதிகமாக அந்தந்த நாடுகளினால் கண்டுகொள்ளப் படவில்லை என்பது போன்று தோன்றினாலும் அந்தந்த நாடுகள் அவைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.
அத்துடன் புலிகளுக்கு ஆதரவாக எதிராக சகல வழிகளிலும் செய்யப்பட்ட பிரச்சாரங்களும் உன்னிப்பாக அவதானிக்கப் பட்டதால்தான் அவைகளில் பிரசாரப்படுத்தப்பட்ட உண்மையான பிரச்சினைகளை தீர்பதற்காக சர்வதேசம் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. இந்த செயற்பாடுகளானது புலிகளுக்காயினும் அரசுக்காயினும் இனிவரும் காலங்களில் மிகப் பெரும் சவாலாக அமையப் போகின்றன.

இந்த செயற்பாடுகள் இரண்டு கட்டங்களாக முன்னடுக்கபடும் போலவே தெரிகிறது

முதலாம் கட்டம்- புலிகளிடம் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டு அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பளிப்பதும் புலிகளை ஆயுதங்களை கீழேவைத்து சரணடையவைப்பது அல்லது முற்றாக துடைத்து விடுவது.

இரண்டாம் கட்டம்- இலங்கையில் பாதிக்கபட்ட சகல மக்களின் சுதந்திர வாழ்கைக்காக அரசியல் சட்டரீதியான ஏற்பாடுகளும் அவர்களின் பிரதேசங்களின் அபிவிருத்தியும்.

தற்போது முதலாம் கட்டம் பற்றி மட்டும் எழுதலாம் என நினைக்கிறேன்.

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளை தலைமையகம் US Pacific Command எனப்படும் அமெரிக்க இரானுவ அதியுர் கட்டளைத் தலைமையம் (USPACOM) புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கான செயற்பாடுகளில் இலங்கையில் இறங்குவதற்கான கட்டளைக்காக காத்திருக்கிறது.

இதில் நம்மவர்கள் அமெரிக்க இராணுவம் ஏன் எங்களின் பிரசினைக்குள் மூக்கை நுளைக்க வேண்டும் இவர்கள் யார் என்று கேட்பவர்களும் உண்டு எனவே இந்த USPACOM என்றால் என்ன என்பதை சற்று நோக்குவோம்.

US Pacific Command ஆனது ஜனவரி 1,1947 ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஹரி ருமன் (Harry Truman) அவர்களால் நிறுவப்பட்டதாகும் இது இரண்டாம் உலகப்போர் உற்பட வியட்னாம் மற்றும் கொரியா போர்களில் பங்குபற்றியுள்ளது. இதன் தலைவராக அமெரிக்க ஜனாதிபதி செயற்படுவார். இதன் தலைமையகம் ஹவாலியில் அமைந்துள்ளது இதுவே உலகெங்கும் உள்ள அமெரிக்க முற்படைகளுக்கும் தலைமை கட்டளை பீடமாகும்.

இரண்டாம் உலகப்போரின் பின் 1972ம் ஆண்டு இதன் பொறுப்புக்கள் இந்து சமுத்திர பகுதிக்கும்,தென் ஆசிய பகுதிகளுக்கும் வட தென் துருவங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. 1976 ம் ஆண்டு ஆபிரிக்காவின் ஒரு பகுதிக்கும் பின்பு 1989 ம் ஆண்டு ஜனாதிபதி ரோனால் ரேகனால் (Ronald Reagan) சீனா, கொரியா, மங்கோலியா மற்றும் மடகஸ்கார் ஆகியவற்றுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

ஆகவே அவர்கள் பொறுப்பு வகிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுருத்தல்கள் மக்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ ஏற்பட்டால் அவற்றைப் பாதுகாப்பது இதன் நோக்கம் ஆனால் இவர்கள்தான் எங்கள் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் எனக் கூறும் நாடுகளும் உண்டு.

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் பிரச்சினையும் உலகின் கவனத்தை ஈர்த்து விடவே நம்மவர்களும் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதாக கவன ஈர்ப்புக்கள் நடத்தவே இலங்கை அரசும் இரண்டு பூதங்களிடம் இறுதிப் போரை கையளித்து தங்களின் இழப்புக்களையும் சர்வதேச ரீதியாக தங்களின் நியாயத்தையும் நிறுவி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும்


புலிகளை வேருடன் பிடுங்குவதற்காகவும் நகர்திய காய்கள்தான் அண்மையில் அமெரிக்க அரசுடனும் USPACOM கட்டளை தளபதியுடனும் பாதுகாப்புச் செயலாளர் நடத்தய மகாநாடாகும்.

இதன் விளைவு இரண்டு பூதங்கள் புலிகளின் முடிவைத் தீர்மானிக்கப் போவதாக தெரிகிறது ஒன்று USPACOM மற்றது இந்திய றோ(RAW). தற்போது இந்தியா அமெரிக்காவுக்கு இடையில் மிகச் சிறந்த உறவு அனுசக்தி ஒப்பந்தம் உற்பட நிலவுவதால் இவை இரண்டும் சேர்ந்து முடிவுரை எழுதப்போகின்றன.

இந்த முடிவுரை மக்கள் மீட்பு என்ற தலையங்கத்துடன் வெளிவரப் போகிறது. இதில் தற்போது களத்தில் உள்ள புலிகளை ஒன்றில் ஒழித்துவிடுவது அல்லது சரணடைய வைப்பதும் முக்கிய பொறுப்பாக இந்திய இராணுவ உதவியுடனான USPACOM மின் பொறுப்பாக இருக்க

அவர்களை மீண்டும் தளைக்க விடாமல் தடுப்பது மற்றும் ஊடுருவும் புலியுறுப்பினர்களை தடுப்பது அல்லது கைது செய்வது றோ வின் முக்கிய பொறுப்பாக அமையப் போகிறது.

இதனால் USPACOM க்கு தங்களின் Wikipedia வில் இலங்கை பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைத்தது என பெயரிட்டுக் கொள்ளவும். இந்தியாவிற்கு தமிழ் நாட்டில் ஏற்பட்ட அலையை தங்களின் பக்கம் திருப்பவும் மற்றும் தங்கள் எதிரியை ஒழித்தோம் என்ற மனநிறைவையும் ஏற்படுத்தும்.

அதற்காகவே இந்தியா பகிரங்கமாக மருத்துவக் குழுவையும் (இராணுவ மருத்துவக் குழு) மறைமுகமாக நிறையவே இலங்கை அரசுக்கு வழங்குகிறது இது முதல் படி மட்டுமே.
இவ்வாறு சர்வதேச வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ள பிரபாகரனும் புலிகளும் தங்கள் வாழ்கையில் என்றும் இப்படியான நகர்வுகளைச் சந்தித்தது இல்லை.

தங்களின் விரலைப் பிடித்தே தங்களின் கண்னைக் குத்துகிறது சர்வதேசம்.
அவர்கள் நடத்திய போராடங்களின பேரிலேயே அவர்கள் அழிகப்படபோவதாகவே தெரிகிறது.
இவையெல்லாம் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் ஒரு தலைப் பட்டசமாக சகல நேரங்களிலும் யாரையும் மதிக்காமல் அவர்களின் கருத்துக்களை கேட்காமல் சர்வதிகாரத்துடன் அவர்கள் நடந்துகொண்டதற்கான விலை எனலாம்.

இதில் பலிகொடுக்கப் பட்ட பிள்ளைகளும் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களும்தான் பாவம் இழப்புகளுக்கும் உயிர்களுக்கும் பிரபாகரனோ அல்லது ஆதரவாளர்களோ என்ன செய்யப் போகிறார்கள்?

இந்த பூதங்களின் பிடியில் இருந்து புலிகளோ அல்லது பிரபாகரனோ மீள்வது கடினம் மட்டுமல்லாது இலங்கை அரசும் அவர்களின் கையில் உடனே ஒப்படைக்காது தாங்களே இவற்றை முடிக்கலாமா என்றே நோக்குவது போல தெரிந்தாலும்.
இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் “மிக அவதானமாக தாக்குதல் நடத்துங்கள்” என்ற இராணுவத்திடமான கோரிக்கையானது நிச்சயம் பூதங்கள் சர்வதேச சமாதானக் கொடியுடன் உள் நுளைந்து மக்களை மீட்க மீதிப் புலிகளை தாங்கள் இலேசாக பிடித்துவிடலாம் என்பதையே காட்டுகிறது.

புலிகளின் இருபதைந்து வருடகால யுத்த தந்திரம், அரசியல் தந்திரம் மற்றும் புலம் பெயர் நாடுகளில் வாழும் அவர்களின் புத்தி ஜீவிகளின் மூலைகள் எல்லாம் இதிலிருந்து மீள்வதில்தான் உள்ளது அதுவே இவர்கள் புலிகளா அல்லது ..............? என்பதை தீர்மானிக்கும்.

பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான். – காசி ஆனந்தன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com