புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசம் படையினரின் கண்ணுக்கு எட்டும் தூரத்தினுள் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மக்கள் மீட்க்கப்படுவர்.
சாலைக்கரையோரப் பிரதேசத்தினூடாக முன்னேறும் படையினர் புதுமாத்தளன் பிரதேசத்தில் மக்களுக்காக யுத்த சூனியப்பிதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டு மக்கள் தங்கியுள்ள பிரதேசத்தை அண்மித்துள்ளதாக தெரியவருகின்றது. அரசினால் இப்பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மக்களில் பெருந்தொகுதியினர் பாதுகாப்பின் நிமிர்த்தம் அங்கு நிலைகொண்டுள்ளனர். அங்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களை பாராமரித்து வருகின்றது.
இந்நிலையில் படையினர் இப்பிரதேசத்தை அண்டியுள்ளதுடன் அப்பிரதேசம் படையினரின் கண்ணுக்கு எட்டிய தூரத்திற்குள் வந்துள்ளதாக களமுனையில் நிற்கின்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவல்களின் அடிப்படையில் நாளை அல்லது மறுதினம் அங்குள்ள மக்கள் படையினரால் மீட்க்ப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அம்மக்கள் மீட்க்கப்பட்டால் வன்னியில் எஞ்சுவது புலிகளின் அதி தீவிர விசுவாசிகளாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பிரதேசத்தில் தங்கியுள்ள மாவீரர்கள் எனப்படுவோரின் பெற்றோரும் தமிழ்ச்செல்வன், சங்சர் போன்ற உயர்மட்ட தளபதிகளின் குடும்பத்தினரும் மாத்திரமேயாகும்.
0 comments :
Post a Comment