திருமலை கொண்டு வரப்பட்டுள்ள நோயாளிகளுள் போரில் காயமடைந்த புலிகளும்.

கடந்த வாரங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் திருமலை கொண்டுவரப்பட்டுள்ள நோயாளிகளுள் போரில் காயமடைந்த புலிகளும் அடங்குவதாக திருமலைப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியஸ்த்தகர் ஜெயலத் பலகல்ல தெரிவித்துள்ளார். இதுவரை 12 காயப்பட்ட புலிகள் இனங்கணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணி ஒன்று திருமலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன்னியில் இருந்து வெளியேறும் மக்களுடன் வரும் புலிகளை இனங்காண்பதற்காக விசேட செயற்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment