நேற்றும் இன்றும் ஐ.நா ஊழியர்கள் அடங்கலாக 103 பொதுமக்கள் வன்னியின் இருந்த கடல் மார்க்கமாக வெளியேறியுள்ளனர்.
இன்று காலை முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து 37 பொதுமக்கள் கடல்மார்கமாக வெளியேறி புல்மோட்டை கடற்படை முகாமில் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் 12 பேர் வன்னியை சேர்ந்த ஐ.நா ஊழியர்கள் ஆகும்.
இதே நேரம் நேற்று (பெப் 23) 21 ஆண்கள் 18 பெண்கள் 17 குழந்தைகள் என 56 பேர் 10 குதிரை வலுக்கொண்ட இயந்திர பைபர் கண்ணடி இழைப்படகுகளின் உதவியுடன் முல்லைத்தீவில் இருந்து வெளியேறியுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட அவர்களை கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று அங்கிருந்து சிவில் அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment