திருமலையிலிருந்து வன்னிக்கு இன்று உணவுப்பொருள்களுடன் கப்பல் புறப்படும்.
வன்னி மக்களுக்குத் தேவையான அத்தியவசிய உணவுப் பொருள்களுடன் திருகோண மலையில் இருந்து கப்பல் ஒன்று இன்று புறப்பட்டு அங்கு சென்றடைய உள்ளது.
செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் வழித்துணையுடன் இந்தக் கப்பல் அங்கு செல்வதாகத்தெரிவிக்கப்பட்டது.
இதுவரை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாக உலக உணவுத்திட்டத்தின் வாகன அணி மூலம் உணவுப் பொருள்கள் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.ஆனால் முல்லைத்தீவில் மோதல்கள் அதிகரித்தும் தொடர்ந்தும் நடைபெறுவதால் தரைவழியாக அத்தியாவசியப் பொருள்கள் வன்னிக்கு எடுத்துச்செல்வது கடந்த ஒரு மாதகாலமாகத் தடைப்பட்டிருந்தது.
இப்போது செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதிகாரிகள் அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் பேச்சு நடத்தியதன் பயனாக, கப்பல் மூலம் உணவுப் பொருள்கள் இன்று எடுத்துச் செல்ல ஏற்பாடாகியுள்ளது
0 comments :
Post a Comment