யுத்த நிறுத்தத்துக்கு சர்வதேசம் உதவ வேண்டும் இந்தியா ஜனாதிபதியிடம் மகஜர்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் சர்வதேச நாடுகளை இந்தியா வலியுறுத்த வேண்டுமெனக் கோரி இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடம் மனுவொன்று நேற்றுக் (17) கையளிக்கப்பட்டது.
தி.மு.க தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணை அமைப்பு இது தொடர்பாக நேற்று (17) புதுடில்லியில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளித்தது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையே ஒரே நம்பிக்கை. ஆகவே இந்த நிலையில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் தலையிட்டு இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட வழி காணவேண்டும். இவ்வாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment