வவுனியா தேவிபுரம் பகுதியில் பத்து புலி உறுப்பினர்கள் கைது!
இராணுவக்கட்டுப் பாட்டுப் பிரதேசமான வுனியா தேவிபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பத்துப் பேரை நேற்று(17) இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஒன்பது ஆண் புலி உறுப்பினர்களும் ஒரு பெண் புலி உறுப்பினரும் அடங்குவதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று (18) தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட பெண் புலி உறுப்பினர் 17 வயதான வரெனவும் ஏனைய ஆண் புலி உறுப்பினர்கள் 20 வயதுக்கும் 33 வயதுக்குமிடைப்பட்டவர்களென்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் வவுனியா பொலிஸில் ஒப்பபடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன.
0 comments :
Post a Comment