முல்லைத்தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்துவரப்பட்ட மக்கள் கொழும்பு, கண்டி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பு.
முல்லைத்தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்து வரப்பட்ட வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த 1212 பொதுமக்களில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்து 306 பேருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28 பேர் விசேட சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கும் கண்டி போதனா ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 11 இலிருந்து பெப்ரவரி 16 வரை திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களில் இதுவரை இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் வேலாயுதம் சிவகுமார். மற்றவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரிமுகாங்களுக்கு திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட வன்னிப்பிரதேசமக்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.02.2009), நண்பகல் 12 மணி வரை அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.
17.02.2009, நண்பகல் 12 மணி வரையான நிலைவரப்படி வெளிமாவட்டங்களிலுள்ள அரச ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பிரதேச மக்களின் எண்ணிக்கை வருமாறு;
கந்தளாய் ஆஸ்பத்திரி 84, தம்பலகமம் 33, பொலன்னறுவ 86, திருகோணமலை ஆஸ்பத்திரி 678, திருமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி83.
0 comments :
Post a Comment