வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண பொருட்களை அமெரிக்க மிசன் திருச்சபை வழங்கியது .

வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், காயமடைந்து திருகோணமலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபைக் குழுவொன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.
இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி. எஸ்.ஜெயநேசன் தலைமையிலான இக்குழுவில் திருச்சபையின் மதகுருமார்களும் மற்றும் நிவாரணப் பணியாளர்களும் என 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.
வவுனியாவிலுள்ள 3 நலன்புரி நிலையங்களுக்குத் தாங்கள் விஜயம் செய்ததாக தெரிவித்த அருட் கலாநிதி. எஸ்.ஜெயநேசன்,அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான மக்கள் வெளியிட தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இருப்பதாகக் கூறினார்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்கைள் உட்பட பலரும் காணப்படுவதாகவும் கூறினார்.
தங்கள் திருச்சபை ஊடாக ஒரு தொகுதி மருந்துகள், குழந்தைகளுக்கான உணவுகள் மற்றும் உடுதுணிகள் வழங்கப்பட்டதாகவும் இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி. எஸ்.ஜெயநேசன் மேலும் குறிப்பிட்டார்.
Thanks: virakesari.
0 comments :
Post a Comment