புதுக்குடியிருப்பு மேற்கு படையினர் வசம். 28 புலிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டது. (படங்கள்)

கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சமரின் பின்னர் புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதி
திங்கட்கிழமை படையினரின் பூரணகட்டுப்பாட்டில் வந்திருப்பதாக பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு இடம் பெற்ற மோதல்களின் முடிவில் திங்கட்கிழமை படையினர் மேற்கொண்ட தேடுதல்களில் புலிகளின் 28 சடலங்களையும், 81மிமீ மோட்டார், 01ரி56 ரக துப்பாக்கி, 02 தொலைத்தொடர்பு சாதனம், மற்றும் 01 சினைப்பர் துப்பாக்கி என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
மேலும் பரந்தன் முல்லைத்தீவுப் பாதையில் வடக்கேயும் தெற்கேயும் பலத்த மோதல் வெடித்துள்ளதாகவும் தெரியவருகிறது.



0 comments :
Post a Comment