மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் செயலாளர் நாளை இலங்கை வருகிறார்.
மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஜோன் ஹொல்மஸ் நாளை இலங்கை வருகிறார். இலங்கை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவின் அழைப்பினையேற்றே இவர் இலங்கை;கு விஜயம் செய்கிறார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரும் ஜோன் ஹொல்மஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிகார அமைச்சர் ரோஹித போகல்லாகம, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ உட்பட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
வடபகுதி நிலைவரம் தொடர்பாக இவர் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment