போருக்குள் சிக்கித்தவிக்கும் மக்களை வெளியே கொண்டுவர இந்தியா உதவும்.- பிரணாப்
வன்னியில் சண்டை நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று கருத்துவெளியிட்ட பிரணாப் முகர்ஜி இலங்கை
அரசாங்கத்துடனும் ஐ.சி.ஆர்.சி.யுடனும் இணைந்து போர் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று என இங்கு குறிப்பிட்ட அவர் 'அது தமிழ் சமூகத்துக்கு அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நலன்களுக்காக விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன்இ தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
1987ம் ஆண்டு யாழ் குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் இலங்கைப் படையினர் ஒபரேசன் லிபரேசன் என்ற படை நடவடிக்கையை முன்னெடுத்து, குடாநாட்டின் மீது பொருளாதார தடையை ஏற்படுத்தியபோது, இந்தியா உடனடியாகத் தலையிட்டு குடாநாட்டு மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொருள்களை வழங்கியது.
தொடர்ந்துஇ இந்தியாவின் அழுத்தம் காரணமாக படை நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டதுடன்இ பாரிய உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகளிலிருந்து குடாநாட்டு மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
எனினும்இ 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து இலங்கை வந்த இந்தியப் படைகள் புலிகளுடன் மோத நேர்ந்தமைஇ ராஜீவ் காந்தி படுகொலை போன்ற காரணங்களால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா சற்றுத் தள்ளியே இருந்துவந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் படை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பெருமளவு அழிவுகள் ஏற்பட்டபோதும், அதுகுறித்து இந்தியா அதிக கவனம் செலுத்தியிருக்கவில்லை.
இலங்கைப் படையினர் வன்னி மீது படை நடவடிக்கையை ஆரம்பித்து முன்னேறத் தொடங்கிய பின்னர் இந்தியா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என்று தமிழ்நாட்டில் பெருமெடுப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் இந்திய மத்திய அரசு இதுவிடயத்தில் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வந்ததது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் அமைதிப் பேச்சுக்கு உதவத் தயார் என்று அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் அறிவித்தார்.
தற்போதுஇ மக்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருப்பது இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் மனப்போக்கில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதையே காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 comments :
Post a Comment