ஜனாதிபதிக்கான ஐ.ரி ஆலோசகர் பதவியிலிருந்து நாராயணமூர்த்தி விலகுகிறார்.

கடந்த 13ந் திகதி இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வியின் பிதா என வர்ணிக்கப்படுபவரும், இந்திய இன்ஃபோசைஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேரறிஞர் என். ஆர். நாராயணமூர்த்தி அவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கான தகவல் தொழில்நுட்பத்துறை ஆலோசகராக மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ் நியமனத்திலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கும் திரு. நாராயணமூர்த்தி அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்: "தனது சொந்தக் காரணங்களுக்காக தான் இந்நியமனத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும், தனது இலங்கை விஜயத்தின்போது அளிக்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும்" கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment