புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளில் உக்கிர மோதல்.
வன்னியில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் உக்கிரம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் படையினருக்கும் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
நேற்று புதுக்குடியிருப்பு மேற்கேயும் முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசங்களில் படையினரின் ராஸ்க போஸ் 4ம் , 5ம் பிரிவுகளுடன் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் அப்பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் தயாரிப்பான பசிலன் ஆட்லறிக் குண்டொன்றும் 122 மி.மி ஆட்லறிக்கான குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு கரையோரப் பிரதேசமான சாலைப் பிரதேசத்தில் 53ம் படையணியினருடன் இடம்பெற்ற மோதல்களில் இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதே நேரம் முகமாலைப் பிரதேசத்தில் படையினர் 81 மிமி மோட்டார் குண்டுகள் 02, ஆhபிஜி குண்டொன்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளின் சடலமொன்றை ரி56 ரக துப்பாக்கி மற்றும் தொலைத் தொடர்பு சாதனம் சகிதம் கைப்புற்றியுள்ளனர்.
0 comments :
Post a Comment