நேற்று 23 பொதுமக்கள் யாழ் படையினரிடமும் 12 பொதுமக்கள் கடற்படையினரிடமும் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
நேற்றுக்காலை முல்லைத்தீவில் இருந்து சிறிய வள்ளங்களின் உதவியுடன் 4 ஆண்கள் 5 பெண்கள் 6 குழந்தைகள் என 15 பேர் வெற்றிலைக்கேணிக்கு வடக்கேயும் மேலும் இருகுடும்பங்களைச் சேர்ந்த 4 ஆண்கள் 2 பெண்கள் 2 குழந்தைகள் என 8 பேர் தாளையடிக்குத் தெற்கே வத்திராயனிற்கும் வந்தடைந்துள்ளனர். இவர்ளை மீட்ட யாழ் படையினர் சிவில் நிர்வாகப் பிரிவினரினடம் கையளித்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதே நேரம் நேற்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு கடலில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரிடம் பைபர் கிளாசினாலான 15 குதிரைவலுக் கொண்ட படகுடன் 6 ஆண்கள் 4 பெண்கள் 2 குழந்தைகள் என 12 பேர் பாதுகாப்பு கோரியுள்ளனர். இவர்கள் புல்மோட்டை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு பாதுகாப்பு தேடிவந்துள்ள மக்கள் புலிகள் படையினரால் மக்களுக்கான பாதுகாப்பான இடங்களாக பிரகடணப்படுத்தியுள்ள பிரதேசங்களில் ஆட்லறி நிலையங்களை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment