யுத்த நிறுத்தற்திற்கான அழுத்தங்கள், வேண்டுகோள்களை அரசு நிராகரித்துள்ளது.
ஐ.நா மற்றும் இணைத்தலைமை நாடுகள் ஊடாக புலிகள் யுத்த நிறுத்தம் ஓன்றை கோரியுள்ள நிலையில் அரசு அதனை நிராகரித்துள்ளது. அரசு இவ்விடயாமாக விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு தாம் தயாராக இல்லை என அறிவித்துள்ளனர்.
புலிகள் அரசில் துறைப் பொறுப்பாளர் நடேசன் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் தாம் ஆயுதங்களை கீழே போட தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டால் தமக்கு ஆயுதங்கள் அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு கடந்த காலங்களை திருப்பி பார்கின்ற போது புலிகள் தமக்கென ஓர் இராணுவக் கட்டமைப்பை வைத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவாகவே அனைத்து தீர்வு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment