முழங்கையில் குண்டு பாய்ந்து விமானி மயக்கடைந்து விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
நேற்று பிற்பகல் 8.40 மணியளவில் புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து புறப்பட்ட புலிகளின் இருவிமானங்களும், அவை புறப்பட்டு 20 நிமிடங்களில் விமானப்படையினரது ராடர்களில் தெரிந்துள்ளது. கொழும்பில் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியழிக்கும் நோக்குடன் புறப்பட்ட விமானங்கள் ஒட்டிசுட்டான் , முருங்கன் , ஆனைமடு வழியாக நீர்கொழும்பை அடைந்து நீர்கொழுப்பிலிருந்து ஒருவிமானம் கட்டுநாயக்க விமானப்படைத் தளப்பிரதேசத்தினுள்ளும் மற்றயது கொழும்பு துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தினூடாக கொழும்பு விமானப்படைத் தலமையக பிரதேசத்தையும் அண்டியுள்ளது. ராடர்களில் புலிகளின் விமானங்கள் தெரிந்ததில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இயக்கப்பட்டதுடன் மின்சார இணைப்பு முற்றாக துண்டிக்கப்பட்டது.
நீர்கொழுப்பில் இருந்து கட்டுநாயக்க விமானப்படை தளம் நோக்கிப் பிரிந்து சென்ற புலிகளின் விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் கிபீர் மற்றும் யுத்த விமானங்கள் தரித்து நிற்கும் பகுதியை அடைந்துள்ளது. 150 கிலோ கிராம் சி4 ரக வெடிமருந்துகளை நிரப்பி வந்த மேற்படி விமானத்தின் திட்டம் யுத்த விமானங்கள் தரித்து நிற்கின்ற பகுதியில் தரையிறங்கி அல்லது குத்தென கீழே வீழ்ந்து வெடித்துச் சிதறுவதாகும். ஆனால் தரைமட்டத்தில் இருந்து ஓர் குறிப்பிட்ட தூரத்தில் புலிகளின் விமானத்தை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தினுள் இனங்கண்டுகொண்ட தரையில் உள்ள விமானப்படையினர் புலிகளின் விமானத்தை நோக்கி சுட ஆரம்பித்துள்ளனர்.
தரையில் உள்ள படையினரின் துப்பாக்கி வேட்டுகளால் இலக்கை அடையமுடியாது வான்பரப்பில் தடுமாறிய விமானியின் இடது கையின் தோள்ப்பட்டையின் கீழ் கலிபர் 50 ரக துப்பாக்கி ஒன்றின் ரவை துளைத்துக்கொண்டு நெஞ்சுப்பகுதியை தாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டினால் விமானி மயக்கமடைய விமானம் கட்டுப்பாடு இழந்த இயங்கிக் கொண்டிருந்த திசையில் 4 தொடக்கம் 5 கிலோமீற்றர் தூரம் சென்று ஓர் கிரவல் தரையில் வீழ்ந்து அதே வேகத்தில் இழுபட்டுச் சென்று அருகில் உள்ள ஓர் சதுப்பு நிலத்தில் புதைந்துள்ளது. அங்கு புலிகளின் இணையங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படமொன்றில் பிரபாகரனின் இடது கரப்பக்கம் நிற்கும் விமானியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலில் மேலே குறிப்பிட்டவாறு துப்பாக்கி ரவைகள் துளைத்த அடையாளங்கள் காணப்படுகின்றன.
இரண்டாவது விமானம் கொழும்பு விமானப்படைத் தளத்தை தாக்கும் நோக்குடன் தளப்பிரதேசத்தை அண்டியபோது அங்கு தயார் நிலையில் நின்ற படையினர் விமானத்தை தாக்க தொடங்கியுள்ளனர். முழு இருளில் மூழ்கியிருந்த அப்பிரதேசத்தில் இலக்குகளைக் கண்டு பிடிப்பதென்பது கடினமான காரியமாகும். அத்தருணத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டத்தின் மேல் மாடியில் கடமையில் இருந்த விமானப்படையினர் மேற்படி விமானத்தை கண்டுள்ளனர். விமானத்தைக் கண்ட அவர்கள் திட்டமிட்டபடி ஏனைய படையினருக்கு உதவியாக விமானத்தை நோக்கி வெளிச்சத்தை செலுத்தியுள்ளனர். வெளிச்சத்தையும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கட்டிடத்தையும் கண்ட விமானி அதை விமானப்படை தளமாக கருதி அக்கட்டிடத்தை நோக்கி விமானத்தை செலுத்தி அதன் 12 ம் மாடியில் மோதி வெடிக்கவைத்துள்ளார்.
இத்தாக்குதலில் இருவர் உயிரிழந்தும் 47 பேர் காயமடைந்தும் கட்டிடத்தின் முழுக் கண்ணாடி யன்னல்களும் சேதமாகியும் உள்ளதுடன் 12 மாடி முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளது. உயிரிழந்த இருவரும் இறைவரித் திணைக்களத்தின் கட்டிட மேல்மாடியில் காவல் கடமையில் இருந்த விமானப்படையினராவர். காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் அப்பிரதேசத்தில் காணப்படும் உல்லாச விடுதிகளில் தங்கியிருந்தவர்களும் அதன் ஊழியர்களும் என தெரியவருகின்றது. கண்டெடுக்கப்பட்ட விமான எச்சங்களில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
விமானிகளுக்கு தரையில் இருந்து இலக்குகளை அடைவதற்கான உதவிகள் கிடைத்திருந்தாலும் (ஜிபிஎஸ் கருவிகள் உட்பட) அவை தவறுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் காணப்படுகின்றது. காரணம் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மிகவும் நெருக்கமாக காணப்படுவது ஒன்று, இரண்டாவது அக்கட்டிடங்கள் தோற்றத்தில் ஒன்றை ஒன்று ஒத்தவை.
இத்தாக்குதல் இவ்வாறு முற்றும் படுதோல்வியில் முடிந்திருக்கையில் சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் புலிகளின் இணையங்கள் இருவிமானங்களும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தளம் திரும்பியுள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று புலிகளின் வான்புலிகள் என்கின்ற படையணியின் கதை முடிவுக்கு வந்துள்ளது. செக் தயாரிப்புகளான சிலின் 143 (ணுடுஐN-143) தர இலகுரக விமானங்கள் பகுதிகளாக கொண்டுவரப்பட்டு வன்னியில் பொருத்தப்பட்டிருந்ததுடன் அவை வெடிகுண்டுகளை கொண்டு செல்லக்கூடியவாறு மாற்றியமைக்கப்பட்டும் இருந்தது. புலிகள் மொத்தமாக 5 விமானங்களை கொண்டுவந்திருந்தாகவும் அவற்றில் இரண்டு பயிற்சியின் போது வெடித்துச் சிதறியுள்ளதுடன் 1 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விமானப்படையினர் ஜெர் விமானம் சுட்டு வீழ்தியிருந்தது. அவ்விடயத்தை புலிகள் மறுத்திருந்தாலும் அது உண்மையான விடயம் என்பதை குறிப்பிட்ட விமானி பிரத்தியேகமாக இலங்கைநெற்றிற்கு தெரிவித்திருந்தார். இறுதியாக எஞ்சியிருந்த இருவிமானங்களும் நேற்றுடன் முடிவுற்றுள்ளன.
0 comments :
Post a Comment