இங்கினியாகல பிரதேசத்தில் 8 பொதுமக்கள் வெட்டிக் கொலை.
இன்று பிற்பகல் 5 மணியளவில் இங்கினியாகல றத்துக்கல பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள றத்மால்கஎல்ல பிரதேசத்தினுள் நுழைந்த புலிகள் 8 பொதுமக்களை வெட்டிக் கொன்றுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி எண்மரில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் படுகாயமடைந்துள்ள நால்வரில் இருவர் குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்கள் சேனைபயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment