பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோல்டன் கீ கம்பனியின் தலைவரான தேசமான்ய லலித்கொத்தலாவல அவர்கள் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கல்கிசை நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். நேற்று சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு சுகயீனம் உற்றதன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜென்ரல் வஜிர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment