Friday, February 27, 2009

களமுனையில் உக்கிர மோதல். ஏஞ்சியுள்ள இடங்களை தக்க வைக்க புலிகள் அதீர முயற்சி. புலிகளின் தளபதி ஒருவர் பலி.



புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல முனைகள் ஊடாக படையினரின் பல்வேறு படையணிகள் செயற்பட்டு வருகின்றனர். நேற்று காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 5.30 வரை புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பலத்த போர் இடம்பெற்றுள்ளது. படையினரின் 1வது கஜபா படையணி, 4வது விஜயபாகு காலாற்படையணி மற்றும் 681 படையணி ஆகியோர் புலிகளின் பலத்த எதிர்ப்பைச் சந்தித்ததாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மோதல்களில் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சங்கர் என்பவர் கொல்லப்பட்டுள்ளார் எனபதும் மேலும் 18 புலிகள் கொல்லப்பட்டும் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்பதும் புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்டபோது தெரியவந்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com