பொட்டு அம்மான் களமுனைகளில்.
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதியில் யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் களமுனைகளிற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று இரவு அங்கு கடும்போர் இடம் பெற்றதாகவும் மிக நீண்ட நேரமாக அவர் களமுனையில் நின்று படையினருக்கு ஓர் பாரிய சேதத்தை உண்டு பண்ண முயன்றதாகவும் தெரியவருகின்றது. மேற்படி சமரில் இதுவரை 18 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஈழப் போர் 2 ஆரம்பமாகி 19 வருடங்கள் நிறைவுறும் நிலையில் எந்த ஒரு களமுனைக்கும் சென்றிராத பொட்டு இன்று களம் இறக்கப்பட்டுள்ளார். இது புலிகளின் இறுதிக் கட்டம் என்பதை இந்நிகழ்வுகள் நிருபனமாக்குகின்றன.
0 comments :
Post a Comment