புதுக்குடியிருப்பில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 130 மிமி மோட்டார் புலிகளுக்கு எதிராக பாவிக்கப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பிரிகேடியர் கமல் குணரத்தின தலைமையில் செயற்பட்டுவரும் 53ம் படையணியினர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 மிமி மோட்டார் ஒன்றை கண்டுபிடித்திருந்தனர். இந்த மோட்டாரின் சுடுதூரம் 27 கிலோ மீற்றர்களாகும். நேற்று முதல் அம்மோட்டார் புலிகளுக்கு எதிராக வன்னியில் குண்டுகளை ஏவுவதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக வன்னியில் களமுனைகளில் செயற்பட்டு வருகின்ற படைச் சிப்பாய் ஒருவர் அங்கு நிலைகொண்டுள்ள ஐரிஏன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், நாம் வன்னியின் முழுப்பரப்பையும் கைப்பற்றும் நோக்குடன் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் பல வெற்றிகளைக் கண்டுள்ளோம் ஆனால் இந்த மோட்டார் கைப்ற்றப்பட்டது வியக்கத்தக்க வெற்றியாகும். அம்மோட்டாரினூடாக நாம் இன்று எமது எதிரியை தாக்கி வருகின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment