இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை. ஆவரங்காலில் சம்பவம்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆவரங்கால் கிழக்கு சிவன்கோவில் பகுதியிலுள்ள மின்மாற்றிக்குக் காவலில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் மீது நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஆயுததாரிகள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், அவர்களைத் துரத்திச் சென்று இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களையும் அச்சுவேலிப் பொலிஸார் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் அச்சுவேலிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment