இனவாதத்திற்கு கிடைத்த பரிசு: 17 ஆசனங்களை பறிகொடுத்து தேர்தலில் ஜே. வி. பி படுதோல்வி
மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளில் 18 ஆசனங்களைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) இம்முறை தேர்தல் மூலம் 17 ஆசனங்களை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒன்பது ஆசனங்களையும் வடமேல் மாகாண சபையில் ஒன்பது பிரதிநிதிகளையும் என்றபடி 18 ஆசனங்களை ஜே. வி. பி. பெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறாத ஜே. வி. பி. வடமேல் மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்கிறது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. இவ்வாறு போட்டியிட்டதன் மூலம் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகளையும் குருநாகல் மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது.
இதே போல் மத்திய மாகாண சபையிலும் கண்டி மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், மாத்தளை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் ஜே. வி. பி. பெற்றிருந்தது. இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. தனித்துப போட்டியிட்டது. இதனால் குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கிறது.
இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளும் ஜே. வி. பி. பாரிய பின்னடைவை அடைந் திருப்பதையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரி விக்கின்றனர்.
இதே போன்று பாரிய பின்னடைவை ஏற்கனவே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே. வி. பி. சந்தித்தது தெரிந்ததே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்
0 comments :
Post a Comment