பஸ் விபத்தில் ஒருவர் பலி; 35 பேர் காயம்.
புத்தள- கதிர்காமம் வீதியில் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி நேற்றுக்காலை திடீர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.
பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த பஸ் வண்டி கோணகல 16வது மைல் கல் பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகியிதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தள மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுள் 25 ஆண்களும், இரு சிறுவர்களும் எட்டு பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments :
Post a Comment