வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் - ஜனாதிபதி.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்புப் படைகளையோ அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ சென்றடையும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு தனது அரசாங்கம் உத்தரவாதமளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு பேஜ் இணையத்தளத்திற்கு நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களிடமிருந்து பெற்ற உதவிகளுக்கு இணங்க பாதுகாப்பு படையினரிடம் இருந்தும் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கான உதவிகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாயிருக்கும் எனவும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக மீளக்குடியமர்த்த ஏற்கனவே அரசாங்கம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
0 comments :
Post a Comment