Monday, February 16, 2009

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகுகள் 77 பொதுமக்களுடன் காப்பாற்றப்பட்டன.

அளவுக்கு அதிமான மக்களுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று வள்ளங்களைப் படையினர் காப்பாற்றியுள்ளனர். இந்த மூன்று வள்ளங்களிலும் 77 பொதுமக்கள் காணப்பட்டனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதற்காகக் கடல்மார்க்கமாக பயணம் செய்து கொண்டிருக்கும் போது அளவுக்கதிகமான பயணிகள் காரணமாக மூன்று வள்ளங்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தன. இவற்றினை அவதானிதத் கடற்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்கிழக்கு கடற்பரப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், முதலாவது படகிலிருந்து 34 பேரும் ,இரண்டாவது படகிலிருந்து 19 பேரும், மூன்றாவது படகிலிருந்து 24 பேருமாக மொத்தம் 77 பொதுமக்கள் காப்பாற்றப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com